பக்கம்:சீவகன் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னே அழகுற எடுத்துக் காட்டிய ஆசிரியர் தேவர், இங்கு அவ்வாடை ஆபரணங்கள் கழற்றப்படுவதை எண்ணி எண்ணித் தாமே கலுழ்கின்றார். துறவியர் ஒளி விடும் பொன்னையும், கற்கள் இழைத்த கவின் வாய்ந்த அணிகளையும் கழற்றிய பின் அவளுக்கு அணியக் காவி உடையையும் தந்தனர். ஆம். அவள் அவ்வாறு துறவு நிலையில் வாழ வேண் டும் என எண்ணியதற்குக் காரணம், தன் மகன் வளர்ந்து சிறந்து பகை முற்றிச் செழிக்க வேண்டும் என்றும், அதைத்தான் காண வேண்டும் என்றும் நினைத்தமை தான். துவராடை உடுத்து, இலைக்கறியை உண்டு, அரசி யாகிய விசயை வனத்துறை தெய்வமானாள். 'பாலுடை அமிர்தப் பைம்பொன் கலத்திடைப் பாவை யன்ன நூலடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச் சேலடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன்கை வாலடகு அருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானுள்.' (354) என்பது தேவர் வாக்கு. துறவோர் பள்ளியிற்சேர்ந்து அவர்தம் ஒழுக்கங்களை மேற்கொண்ட அரசியை வனத்துறை தெய்வமாக்கிய கூனி, அவளை அங்குள்ள அற வோரிடம் அடைக்கலப் பொருளாகக் கொடுத்துவிட்டு, அவளிடம் தன் நிலையையும் விளக்கி, வேண்டுங் காலத்து வந்து உதவுவதாகவும் கூறி, அவளை விட்டு அகன்றனள். அரசியும் அத்தாப தப்பள்ளியிலேயே துறவு நெறியை ஓம்பி வாழ்ந்து வந்தாள். சீவகன் எனும் பெயர் : கந்துக்கடன் தன் மகன் சீவகனுக்குச் சிறப்புப் பல செய்தான். அங்கு இடுகாட்டில் 'சீவ' என்று தெய்வம் வாழ்த்தினமையின், அதைத் தன் உள்ளத்தில் வைத்தே கந்துக்கடன் மகனுக்கு அப்பெயரை வழங்கினன். பெய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/37&oldid=1484644" இலிருந்து மீள்விக்கப்பட்டது