பக்கம்:சீவகன் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ச்சியும் 37 ரீட்டு விழாச் சிறப்பினைப் பல வகையில் சிறக்க நிறை வேற்றியபின், நாள்தோறும் அவனைப் போற்றி வளர்க்க, சீவகனும் வளர்பிறையென வளர்ந்து வருவானானான். இந்த வளரும் நிலை, (தேவர் நினைவை நந்தகோன் மனைக்கு இழுத்துச் சென்றது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த கண்ணனைப் போல, இங்குச் சீவகன் விசயையின் மகனாய்ப் பிறந்து கந்துக்கடன் மனைவியின் பாலை உண்டு வளர்ந்து வருவானானான் என்று உவமை மூலம் விளக்கிக் காட்டுகின்றார் தேவர். மதியன்னான் வளர்கின்றான்: குழந்தைப் பருவம் நீங்கி இளமைப் பருவத்தை அடைந்தான் சீவகன். நாளும் நாளும் நலஞ்செய்யப் பெற்றவனாய் இளமை இன்பம் ததும்ப அனைவரையும் மகிழ்வித்து வளர்ந்தான் அவன். அவன் வளர்ந்து செல்லும் நிலையைத் தேவர், பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனிவானத்து எல்லார் கண்ணும் இன்புற வூரும் மதிபோன்றும் கொல்லும் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகுஏத்தச் செல்லும் மன்னே சீவகன் தெய்வப் பகைவென்றே.' (364) என்று எடுத்துக் காட்டுகின்றார். அக்குழந்தையின் வளர்ச்சியைக் கண்டு கந்துக்கடனும் அவன் மனைவி சுநந்தையும் மகிழ்ந்து வாழ்வாராயினர். ஞானக் குமரி : அவ்விருவரும் இளமையின் எல்லையை அடைந்த தம் மைந்தனுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத் தைக் கருதினர்; ஒரு நல்லாசிரியர் மூலம் அவனுக்கு அறி வொளி கொளுத்தினர். " மழலையாழ் மருட்டும் தீஞ்சொல் மதலையை மயிலஞ் சாயல் குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்.' (368) 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/38&oldid=1484124" இலிருந்து மீள்விக்கப்பட்டது