பக்கம்:சீவகன் கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சீவகன் கதை பின்பு சீவகன் எண்மரை மணந்து இன்ப நெறியில் வாழ நிற்பதை நினைத்த தேவர், இங்கும் ஞானத்தைக் குமரியாக்கி, அவளைச் சீவகன் மணந்துகொண்டான் என அழகுபடக் கூறுகின்றார். பின்னும் முத்தி இலம்பகத் தும் இவ்வாறே கூறியிருப்பதும் நோக்கற்பாலது. சீவகன் பிறந்து கல்வி கற்றதைக் கூறும் இப்பகுதிக்கே 'நாமகள் இலம்பகம்' எனப் பெயரிட்டார் தேவர். சீவகன் நாமகளின் நலம் பெற்ற சிறப்பை, 'நாமகள் நலத்தை யெல்லாம் நயந்துடன் பருகி நன்னூல் ஏமுத லாய வெல்லாப் படைக்கலத் தொழிலும் முற்றிக் காமனும் கனிய வைத்த புலங்கரை கண்டு கண்ணூர் பூமகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலகம் ஒத்தான்.' (370) என்று எழில்பட எடுத்துக் காட்டுகின்றார். காளைப் பருவம்: 61 ய்தினான். டோரை மயக்கிற்று. கல்வியும் படைக்கலமும் ஒரு சேரப் பயின்று அனைத்திலும் வல்லவனாகிய சீவகன், காளையாம் பருவம் அவனது காளைப் பருவத்து எழில், கண் கன்னியர் அவனைக் கண்டு கருத் தழிந்தனர். 'இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல் லாம், சிலையிகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றாராய் நின்ற செய்தியையெல்லாம் தேவர் எடுத் துக் காட்டுகின்றார். காளைப் பருவத்து எழிலோடு வளரும் அச்சீவகனை அவன் ஆசிரியர் எச்சரிக்க விரும்புகின்றார் போலும்! கன்னியரைக் கண்டு ஒரு வேளை கருத்தழிந்து கெடுவான் என்று கருதினரோ, அன்றி எதனாலோ, அப்போது அவனுக்கு உலக நிலையாமை முதலாய நெறிகளையும் அறங்களையும் உணர்த்துகின்றார்; இறக்குங் காலத்து எதுவும் வாராது என்ற உண்மையை இடித்துரைக் கின்றார்; சீலம் என்னும் வேலியால் தன்னைப் பாதுகாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/39&oldid=1484363" இலிருந்து மீள்விக்கப்பட்டது