பக்கம்:சீவகன் கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை



அன்புடை நண்பர்தம் விருப்பப்படி முன்னர் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், 'கடவுளர் போற்றும் தெய்வம்' என்ற தலைப்பிலும், 'ஆருயிர் மருந்து' என்ற தலைப்பிலும் எழுதி வெளியிட்டேன். அதே முறையில் சீவகன் வரலாற்றையும் எழுதவேண்டு மென 'அமுதசுரபி'யின் ஆசிரியர் அன்பர் வேம்பு அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பப்படி கடந்த இருபது திங்களாக 'அமுதசுரபி'யில் தொடர்ந்து சீவகன் கதை வெளிவந்தது. இன்று அதுவே தொகுக்கப்பெற்று இந்நூல் வடிவில் வெளிவருகின்றது.

திருத்தக்க தேவர்தம் பரந்த கற்புலமைக் கடலுள் புகுந்து திக்குமுக்காடி ஒருவாறு கரையேற வழிகண்டேன். அந்த வழியிடைப் பொறுக்கி எடுத்த சில கருத்துக்களைக் கதையுடன் தொடர்ந்து காட்டியுள்ளேன். தேவர்தம் வாக்கும் இடையிடையே இடம் பெற்றுள்ளது.

சிலம்பும் மேகலையும் பற்றி நான் எழுதிய கதைகள் இரண்டு தமிழ் மாணவர் உலகில் நல்லிடம் பெற்றுள்ளன. இந்நுாலும் அந்நிலையில் மாணவர் உளங்கொள்ளுமாறு அமைந்துள்ளது. மாணவரும் மற்றவரும் ஏற்று நலமுளதேல் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்க்கலை இல்லம்

அன்பன்
அ. மு. பரமசிவானந்தம்

அமைந்தகரை, சென்னை-10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/4&oldid=1301385" இலிருந்து மீள்விக்கப்பட்டது