பக்கம்:சீவகன் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

துக்கொள்ளப் பணிக்கின்றார். அவ்வாசிரியரின் அறி வுரைகளைக் கேட்ட காளையாம் சீவகன் அறிவனைச் சர ணடைந்தான்.

'நல்லறத் திறைவ னுகி நால்வகைச் சரணம் எய்தித்
 தொல்லறக் கிழமை பூண்ட தொடுகழற் காலி னுற்குப்
 புல்லற நெறிக்கண் நின்று பொருள்வயிற் பிழைத்த வாறும்
 இல்லறத் தியல்பும் எல்லாம் இருளறக் கூறி யிட்ட(382)

ஆசிரியரின் போதனைகள் அனைத்தையும் கேட்ட சீவகன் மனம் ஒரு வேளை மாற்றமடைந்திருக்கும்; துறவு நிலையை நாடியிருக்கும். எனவே, ஆசிரியர் அவனது உண்மைப் பிறப்பையும் அவன் ஆற்ற இருக்கும் பணியையும் அவ னுக்கு விளக்க வேண்டியதாயிற்று.

தன்னை அறிந்தான் :

சீவகனது பிறப்பின் இரகசியத்தை உணர் விரும்பிய ஆசிரியர், அவனைத் தனியிடத்துக்கு அழைத் துக்கொண்டு சென்றார்; அவனது பிறப்பினை நேர்முக மாக எடுத்துக்காட்டாமல், ஒரு கதை வாயிலாக விளக்கி னார்; சச்சந்தனுக்கும் அவன் மனைவிக்கும் உற்றதை உணர்த்தி, விசயை சுடுகாட்டில் மகவைப் பெற்று விட, பின்பு வணிகன் எடுத்து வளர்த்து வரும் சிறப்பை யெல்லாம் கூறி, அவ்வாண் மகன் சிறந்தவன் எனவும் உரைத்தார். அக்கதையைக் கேட்ட சீவகன், 'அவ்வாண் மகன் யாவன்?' எனக் கேட்டான். ஆசிரியர், 'நீதான்,' என்று பதில் உரைத்தார். கேட்ட சீவகன் மயங்கி வீழ்ந்தான். உடனே ஆசிரியர் அவனைத் தேற்றி நன் னிலைக்குக் கொண்டு வந்தார்; மேலும் வருந்திய அவனை நோக்கி, மேல் வருந்திக்கொண்டிருப்பதில் பலன் இல்லை,' எனவும், 'பகைவன் இன்னும் நாட்டை ஆள் கின்றான்,' எனவும், 'அவனை ஒழிக்க வழி செய்ய வேண் டும்,' எனவும் வற்புறுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/40&oldid=1484133" இலிருந்து மீள்விக்கப்பட்டது