பக்கம்:சீவகன் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 6 6 6 சீவகன் கதை ஆசிரியரின் உரை கேட்ட சீவகன், அப்போதே புறப்பட்டுச் சென்று, அக்கட்டியங்காரனைக் கொன் று பழி தீர்ப்பதற்காக முனைந்தான். அதுகண்ட ஆசிரியர் அவனைத் தேற்றிப் பொறுக்குமாறு பணித்தார்; சீவகன் தன்னை மேலும் ஓராண்டு வரை வெளிப்படுத்தாது வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்த்தினார். சீவகன், அதுவும் சரி, என் று று கூறிக் காலம் கருதி வாளா இருக்க சைந்தான். ஆசிரியரின் பிறப்பு : மேலும் ஆசிரியர் தம்மைப் பற்றிக் கூற நினைந்து, அதையும் ஒருகதைபோலக் கூறத்தொடங்கினார்: “வரண வாசி என்னும் ஊருக்கு மன்னன் உலோகபாலன் என்பான். அவன் சில காலம் ஆட்சி செய்த பிறகு துறவை மேற் கொள்ள விரும்பித் தன் மகனுக்கு அரசை நல்கித் தவத் தினை மேற்கொண்டான். ஆனால், அவ்வாறு தவமாகிய நோன்பின் வழி நிற்கையில் அவனது முன்னைய வினை வசத்தால் 'யானைத்தீ' என்னும் பெரும்பசி நோய் அவனை வந்து பற்றியது. அதைத் தாங்காத அவன் அவ்வூர்ப் பக்கத்தே வந்து சேர்ந்தான்,' எனக் கூறினார். அவ்வாறு வந்தவன் யார்?' என்று சீவகன் கேட்ட அளவிலே, 'நானே' என்று பதில் கூறிப் பின்னும் அவர் சீவகனைக் கண்டதும் அக்கொடிய 'யானைத்தீ' தம்மை விட்டு நீங்கியதையும், சீவகன் தந்தை தமக்கு அளித்த இனிய உணவின் சிறப்பையும் கூ கூறினார். சீவகனைக் கண்டதும் அவர் பெற்ற நிலையினை, ஐயனைக் கண்ணிற் காண யானைத்தீ அதகங் கண்ட பையண னுகம் போல வட்கயான் பெரிதும் உட்கித் தெய்வங்கொல் என்று தேர்வேற் கமிர்துலாய் நிமிர்ந்த தேபோல் மொய்குரல் முரச நாணுந் தழங்குரல் முழங்கக் கேட்டேன்.' (403), என்று ஆசிரியர் வாக்கிலே வைத்துத் தேவர் விளக்கு கின்றார். ஆசிரியர் சீவகனைக் கண்ட உடனே கேட்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/41&oldid=1484502" இலிருந்து மீள்விக்கப்பட்டது