பக்கம்:சீவகன் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும்

41. அமிர்தம் போன்ற வார்த்தைகளால் அச்சிவகன் உண் மைப் பிறப்பைத் தாம் உணர்ந்ததாகவும், அது முதல் அங்கிருந்து அவனுக்கு வேண்டிய அறிவு நூல்களை உணர்த்தியதாகவும் கூறினார்; மேலும் தமக்குள்ள தவம் செய்தற்குரிய வேட்கையை விளக்கி, உடனே புறப்பட்டுச் செல்லப் போவதையும் கூறினார். தவம் செய்வதை மறுக்க முடியாத சீவகனும் அதற்கு இசைந்தான். எனினும், சீவகனும் கந்துக்கடனும் சுநந்தையும் அவர் பிரிவுக்கு ஆற்றாராயினர். அவ்வாசிரியர் தவமேற் சென்றார். சீவகன் அந்நகரத்திலேயே காலம் கருதி அமைந்திருந்தான். சீவகன் இளமை :

II

இராசமாபுரத்தே

இ ளமையின் எழில் மிக எல்லாக் கலையும் கற்று உணர்ந்த சீவகன், பின்பு சில காலம் அவ்விராசமாபுரத் திலேயே தங்கி வாழ்ந்து, கட்டியங்காரனை வீழ்த்தக் காலம் பார்த்திருந்தான். அவனது காளைப் பருவத்தின் கவினைக்கண்டு அந்நகரக் கன்னிப் பெண்டிர் கருத்தழிந் தனர். சீவகன் கலையின் அகலமும் சிலையின் திறமும் நன்கறிந்து, வீணைச் செல்வத்தில் வல்லவனாகி, தன்னை ஒப்பாரும் மிக்காரும் அந்நகரத்தில் இல்லையெனும்படி வாழ்ந்து வந்தான். இது நிற்க. நிரை கவர்தல்: இராசமாபுரத்தின் சாரலிலே கவலையற்று மேய்ந்து வந்த பசுக் கூட்டங்களுக்கு அக்காலத்தே ஓர் இன்னல் வந்து சேர்ந்தது. காட்டகத்திலிருந்த வேட்டுவர் யாவரும் அந்நகரத்து எல்லையிலே வந்து சேர்ந்து, அந் நகரத்துப் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்ல வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/42&oldid=1484514" இலிருந்து மீள்விக்கப்பட்டது