பக்கம்:சீவகன் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இராசமாபுரத்தே

43

என்று காட்டுகின்றார் தேவர். மத்தெறி தயிரின் சிதறிய அவ்வாய மக்கள் தங்கள் தலைவனாகிய நந்தகோனிடம் ஓடிச் சென்று நடந்ததை உரைத்தனர்.

காட்டிலேயிருந்த வேட்டுவர் கையில் பசுக்களைவிட்டு ஆயர்களெல்லாரும் நகருள் ஓடித் தங்கள் தருவை அடைந்தார்கள். அவர்கள் வழிப் பசுக்கள் கவரப்பட்ட மையை அறிந்தார்கள் இடைப்பெண்கள். அவர்கள் வருத்தம் எல்லை கடந்தது. அவர்கள் வீடுகளில் கட்டப் பட்ட கன்றுகள் தத்தம் தாய்களுக்கு நேர்ந்த கொடுமை அறியாவாய்க் கிடந்தன. ஆயர் குலப் பெண்களோ, அவைகளைக் கட்டித்தழுவி, 'வேட்டுவர் நும் அன்னையரை வருத்திக் கொண்டு சென்றார்களே! எம் அன்னை போன்ற கன்றுகளே, இனி என்ன செய்வீர்கள்!' என எடுத்துக் கூறி வருந்தினார்கள்.

பசுக் கூட்டங்களை வேட்டுவர் கொண்டு சென்ற செயல் நகரமுழுவதும் பரவிவிட்டது. எனினும், ஒரு வரும் அவற்றை மீட்டு வர வழி எது என்று ஆராய முற் படவில்லை. பசுவைக் காத்த கோவலரோ, நேராகக் கட்டி யங்காரன் அரசு புரியும் அரண்மனை வாயிலிலே சென்று முறையிட்டனர். உள்ளே அரசிருக்கையில் அமர்ந்திருந்த கட்டியங்காரன் ஆரவாரத்தைக் கேட்டுக் கோவலரை உள்ளே வரச்செய்தான்; எல்லாவற்றையும் கேட்டறிந் தான்; கோபங்கொண்டான். அவன் கண் சிவந்தது; வாய் துடித்தது. அவன் தன் சேனைத் தலைவனைப் பார்த்து, 'காற்றின் விரைந்து பசுக் கூட்டங்களை மீட்க!' என்று கட்டளையிட்டான்.

அரசன் ஆணை பிறப்பித்த உடனே பெரும்படை திரண்டது. யானையும் குதிரையும் தேரும் ஆளும் செறிந்த படை, வேடர் பசு வளைத்த காட்டை நோக்கிச் சென்றது; சென்று, முன்னேறிக்கொண்டிருந்த வேடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/44&oldid=1484420" இலிருந்து மீள்விக்கப்பட்டது