பக்கம்:சீவகன் கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

44 சீவகன் கதை கூட்டத்தை வளைத்தது. வேடரும் வந்த பெரும்படை கண்டு அஞ்சாராய்த் தத்தம் வில்லை எடுத்து வளைத்து நாணேற்றிப் பகைவர்மேல் அம்பு மாரியைச் சொரிந்த னர். திரண்டு வந்த அரசர் சேனை, வேடர் அம்புக்கு ஆற்றாது உடைந்து திரும்பிச் சென்றுவிட்டது. கேட் டான் கட்டியங்காரன்; ஆனால், மேலும் ஒன்றும் செய்ய மாட்டாது அப்படியே ஆழ்ந்து நின்றான்.

நந்தகோன் அரசன் மேல் செலல் ஒழித்து நிற்பதை அறிந்தான். அதே வேளையில் ஆயர்கள் முகவாட்டத் தோடு வந்து,

'அம்புகொண்டு அரசர் மீண்டார்;
        ஆக்கொண்டு மறவர் போனர்;
        செம்புகொண் டன்ன இஞ்சித்
        திருநகர்ச் செல்வ!' என்றார்.

(439)

அது கேட்ட நந்தகோன் உடனே தன் பசுக் கூட்டங்களை மீட்டுத் தருகின்றவர் யாவராயினும் அவருக்குத் தன் மகளாகிய அழகு திரண்ட அணங்கு கோவிந்தையைத் தரு வதாக நகர் முழுவதும் பறையறையச் செய்தான். அவ் வாறே நகர் முழுவதும் பறையொலி எழுந்தது. மக்கள் கேட்டார்கள்: சீவகன் காதிலும் அச்செய்தி விழுந்தது.

சீவகன் முயற்சி: நந்தகோன் முரசறைந்ததைக் கேட்ட நகர மக்கள் அனைவரும், அவ்வேடரோ போரிட்டு அரசனது பெருஞ்சேனையே அழிந்ததாயின், நாமெல்லாம் எம்மாத் திரம்!' என்ற அளவிலே வாளாவிருந்தார்கள். அழகிற் சிறந்த செல்வியாகிய கோவிந்தையை அடைய விரும்பிய வீரர்களும் வேடரை எதிர்க்க அஞ்சி ஒதுங்கிவிட்டார்கள். இந்த நிலையில் அக்காட்டு நிகழ்ச்சியையும் நாட்டு முரசினை யும் சீவகன் கேட்டறிந்தான். கேட்ட சீவகனது உள்ளம் பொங்கிற்று. கட்டியங்காரன் மீட்டுக்கொண்டு வாராதது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/45&oldid=1484381" இலிருந்து மீள்விக்கப்பட்டது