பக்கம்:சீவகன் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசமாபுரத்தே

47 காலம் அண்மையில் உள்ளதென்பதைக் குறிக்க நினைத் தார் அவர். அவனது முடிவின் தொடக்கத்துக்கு நிரை மீட்சி முதற்படிதானே? இனிச் சீவகனை உலகு அறியப்போகிறது.

மகளிர் செயல்:

                                               வெற்றி பெற்ற வீரனாகிய சீவகன், இராசமாபுரத்து வீதிகளில் சிறக்கத் திரும்பி வரலானான். அவன் வரவு கண்ட மேல் மாடத்திருந்த கற்புடைப் பெண்களெல்லாம் 'துரியோதனன் படை கெடும்படி வென்ற அருச்சுனனைப் போல இவனும் சிறந்து விளங்குக!' என்று வாழ்த்தினார் கள். இ ளமை மத் தன்மை ததும்பி அழகார்ந்து நிற்கும் கொடியனைய பெண்கள், சீவகனைக் கரண வேண்டி அன்னமும் மயிலும் ஒத்து அழகிய தெருத்தோறும் வந்து கூடினார்கள்.

மேல் வருகின்ற சீவகனை இமையாமல் நோக்கி நின்ற நிலையினால் அவர்கள் இமையவரை ஒத்தார்கள்; நாக மகளிரை ஒத்தார்கள். வழி நெடுகத் தெருத்தோறும் உள்ள மாடங்களிலெல்லாம் மகளிர் வைத்த கண் வாங் காராய்ச் சீவக நம்பியை நோக்கி நிற்க, சீவகன் தேர் மேலே சென்றுகொண்டேயிருந்தது. 'இவனைப் பெற்ற தாய் எம்மலையினில் தவஞ்செய்து பெற்றாளோ!' என்று சிலரும், 'இவனைக் கணவனாக அடைய எப்பெண் தவம் செய்திருக்கின்றாளோ!' என்று சிலரும் பலவாறு பேசிக் கொண்டனர். அவன்மேற்கொண்ட காதலால் தம் விருப்பத்தைத் தோழியருக்கு வெளிப்படுத்துவாரும், வளை கழல வருந்தி நிற்பாரும், அவன் தேர் செல்லும் திசை நோக்கி நிற்பாருமாகிய மகளிர் பலர் அவ்வழியை அணி செய்து நிற்க, சீவகன் ஒன்றையும் சிந்தியாதவ னாய்த் தன் தேர்மேல் மாளிகை நோக்கிச் சென்று கொண்டேயிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/48&oldid=1484624" இலிருந்து மீள்விக்கப்பட்டது