பக்கம்:சீவகன் கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 சீவகன் கதை அத்தகைய பெரும்பொருள் தேடியே சீதத்தன் என்னும் வணிகன் தன்னோடு பலரையும் அழைத்துக்கொண்டு கடல்மேற்சென்றான். கடல்மேற்சென்ற சீதத்தன், சிறந்த ஒரு தீவினை அடைந்தான்; அங்குத் தான் கொண்டு சென்ற பொருளை யெல்லாம் நல்ல விலைக்கு விற்றுப் பொருள் பெருக்கி னான்; பின்பு அங்கிருந்து தன் நாட்டுக்கு வாணிபத்தின் பொருட்டுக் கொண்டு செல்லத்தக்க பல்வகைப்பட்ட பொருள்களைக் கலத்தில் ஏற்றிக்கொண்டான்; ஆறு திங்களில் அவ்வாறு சிறந்த வகையில் வாணிபம் செய்து, தன் ஊருக்குத் திரும்பி வரப் புறப்பட்டான். கப்பல் நடுக்கடலுள் சென்றது. வணிகனும் பிறரும் தாம் பெருஞ்செல்வத்தோடு தம் நாடு நோக்கிச் செல் வதை எண்ணிச் சிந்தை மகிழ்ந்தனர். அதே வேளை யில் நடுக்கடலில் ஒரு பெரும்புயல் கிளம்பிற்று. காற்றுச் சுழன்று வீசிற்று. வானமுகடு மறைபட்டது. பிழைப் பது அரிதென அனைவரும் அஞ்சினர். அறமறிந்த அறி வுடைய நாய்கன், உளம் வருந்தினன்; பின்னர், 'நமக்கு வருவன எவ்வகையிலும் வந்து சேரும்; ஆகவே, அதைத் தடுத்தல் என்பது இயலாது; அவ்வாறு துன்பம் வந்த காலத்து அதை நோக்கிப் புன்சிரிப்போடு நின் று வெல்ல லன்றி வேறு வழி இல்லை,' என்பதை உணர்ந்தான்; உணர்ந்ததை மற்றவர்களுக்கும் உணர்த்தினான். இடுக்கண்வந் துற்ற காலை எரிகின்ற விளக்கநடுக்கம்ஒன் றானும் இன்றி நகுக;தாம் நக்க போழ்துஅவ் விடுக்கணை அரியும் எஃகாம்; இருந்துஅழுது யாவர் உய்ந்தார்?' வடுப்படுத்து என்ன ஆண்மை? வருபவந் துறுங்க ளன்றே?' (509) என்று அழகுறச் சிறந்த பெருங்கருத்தைத் திருக்குறள் அடி ஒற்றி எடுத்துக் காட்டுகின்றார் திருத்தக்க தேவர். இவ்வாறு அறமுணர்த்திய சீதத்தன், இறுதியில் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/51&oldid=1484139" இலிருந்து மீள்விக்கப்பட்டது