பக்கம்:சீவகன் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 51 கலத்திருந்த மக்களை நோக்கிப் பிண்டி நீழற்பெருமானை நினைத்து அவன் பாதங்களை வணங்கி வா ழ்த்துமாறு வேண்டிக்கொண்டான். கப்பல் கடலுள் ஆழ்ந்தது. சீதத்தன் மட்டும் ஏதோ ஒரு கழியைப் பற்றினவனாகித் தட்டுத்தடுமாறித் தன்னை மறந்த நிலையிலே அருகில் தான்றிய ஒரு மணல் திட்டை அடைந்தான். வித்தியாதர நாட்டிலே து கரையில் கண் விழித்துப் பார்த்தான் வணிகன். எங்கும் மணல் திட்டுத் தெரிந்தது. நண்டுகள் நகர்ந்த சென்றன. அவற்றைக் கண்டு அன்னங்கள் கெடுதல் செய்யாது நின்றன. அந்த நிகழ்ச்சி வணிகன் உள்ளத் தில் தனக்கும் பிழைக்க வழி இருக்கும் என்ற உணர் வைத் தூண்டிற்று. தூரத்தே ஏதேனும் கப்பல் வருகின் றதோ என்று சுற்றுமுற்றும் பார்த்தான்; கப்பல் தென் படவில்லை. ஆனால், தூரத்தே ஒருவன் தென்பட்டான். எனவே, சீதத்தன் அவன் இருக்குமிடம் சென்று, தான் பட்ட வருத்தத்தை அவனுக்கு உரைத்தான். அது கத்தி என்னும் அப்புதியவன், பேசலானான்: தான் வல்லவன் என்றும், நொடியில் அவன் கப் பலையும் ஆழ்ந்த தோழரையும் மீட்டுத் தரக்கூடும் என் றும், தன்னுடன் வணிகன் வரவேண்டுமென்றும் சொல் லிச் சீதத்தனைப் பற்றித் தூக்கிக்கொண்டு எதிரே இருந்த மலைமேல் பறந்தான். அங்கு அழகிய சோலையிலே தங்கி, இனிய கனிகளை உண்டு, பின்னும் மேலே சென்று, அந் நாட்டு மன்னன் வாழும் அழகிய நகரினை அவ்விருவரும் அடைந்தனர். அதன் சிறப்பையெல்லாம் கண்டு கொண்டே வணிகனும் வந்தவனும் அந்நகரத்துத் தலை வன் தங்கிய உயரிய மாடத்துள் புகுந்தனர். தத்தையின் வரலாறு: நகரத்துள் வந்த சீதத்தனைத் தரன் மாளிகைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/52&oldid=1483792" இலிருந்து மீள்விக்கப்பட்டது