பக்கம்:சீவகன் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 53 துச் சென்று, வீணையால் வளை வெல்வானுக்கு மணத்தில் கொடுத்து மகிழ்வாயாக!' என்றான். அரசி மட்டும் அந்நிலை நோக்கி உள்ளம் அழிந்து, 'தத்தைக்கே தக்கதோ!' என்று நைந்தனள். எனினும், அரசனோ, அவளைத் தேற்றி, பெண்டிராய்ப் பிறந்தவர் தனித்து வாழ்தலில் சிறப்பில்லை என்றும், தத்தை அங்குத் தன் காதலனோ சிறக்க வாழ்வாளென்றும், அதுவே கணி சொன்னதாகும் என்றும் கூறி இசையச் செய்தான். பின்பு அரசன் தத்தையின் உயிர்த்தோழியாகிய வீணுபதி என்னும் சேடியை அழைத்து, அவளையும் உடன் செல் லுமாறு பணித்து, அவளே தத்தைக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து வேண்டும் வகையில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்; பின்பு தத் தைக்கு வேண்டிய அருங்கலப் பெட்டிகள் பலவும், பிற பொருள்கள் பலவும் வரிசையாகக் கொடுத்தான். தத்தை அனைவரையும் பிரிய வேண்டுமே என்பதை எண்ணி அழுதாள்.தாய் அவளைத் தழுவித் தன் வருத்தத்தை மாற்றிக்கொண்டாள். தத்தையும் தாயை நீங்கித் தந்தை யாம் கலுழவேகனைப் பணிந்தாள். அவனும் அவளை அன்புடன் தழுவி, ஆற்றாது, தோழியரிடம் சொல்வா னானான் கடலில் வலம்புரி ஈன்ற முத்தம் உலகில் மக்க ளுக்கன்றி எவ்வாறு வலம்புரிக்குப் பயன்படாதோ, அது போன்று நம்மிடைப் பிறந்த தத்தையும் இராசமாபுரத்து உரியவனுக்கு வாழ்க்கைப்படச் செல்கிறாள்,' எனுங்கருத் தால், (563) வலம்புரி யீன்ற முத்தம் மண்மிசை யவர்கட் கல்லால் வலம்புரி பயத்தை யெய்தாது; அனையரே மகளிர்.' என்றான்.) பின்னர் அனைவரும் சேர்ந்து தத்தையை அழகிய விமானத்தில் ஏற்றினர். பலரும் பின் தொடர்ந் தனர்; சீதத்தனது கப்பல் கவிழ்ந்ததாக நினைத்த கட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/54&oldid=1483719" இலிருந்து மீள்விக்கப்பட்டது