பக்கம்:சீவகன் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 55 தத்தையின் மணத்துக்கு அமைத்த பந்தலின் அழ கைப் பலபட விரித்துரைக்கின்றார் தேவர். பொன்னா லும் மணியாலும் பல்வேறு வகையான அழகு பொருந்த அமைக்கப்பட்டது அழகிய மணி மண்டபம். அம்மண் டபச் சுவர்களிலெல்லாம் அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றன. அம்மண்டப அழகை விளக்கி வரும் தேவர், 'கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்; கொண்டுலக மேத்தலின்அக் கொற்றவனை ஒக்கும்.' (599) என்று போற்றுகின்றார். மாடம் அழகு செய்யப்பட்ட பின் சீதத்தன் தன் ஏவலரை விளித்து, முரசறைந்து நாட்டுக்குத் தத்தை யின் சிறப்பையும் மணம் நடக்கப்போகும் முறையையும் எடுத்து விளக்க வேண்டுமெனக் கூறினன். அமைச்ச ரும் முரசு முழக்கும் மக்களை அழைத்துச் செய்தியை விளக்கிக் கூறினர். முரசு முழக்கும் அரச செயல் புரியும் அம்மக்களும், அவ்வாறே யானைமீதமர்ந்து முரசறைந்து, நாடு வாழ்த்தி, நாட்டின் செல்வம் வாழ்த்தி, அரசனை வாழ்த்திப் பின் தத்தையைப்பற்றிக் கூறினார்கள்; தத் தையின் எழில் நலத்தையெல்லாம் கூறி, அவள் தந்தை யாகிய கலுழவேகன் கூறியவற்றையெல்லாம் விளக்கி, அவளை வீணையில் வெல்வார் யாவரேயாயினும், அவளை அடையப் பெறுவர் என்பதையும் கூறி முரசறைந்தனர். 'தீந்தொடை மகர வீணைத் தெள்விளி யெடுப்பித் தேற்றிப் பூந்தொடி அரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்கு ஈந்திடும் இறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும் வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை.' (608) என்று முரசறைந்தனர். முரசொலி நகரமுழுவதும் கேட் டது. செய்தி நாடு முழுவதும் பரவிற்று. செய்தி கேட்ட மற்ற நாட்டு மன்னரும் வீரரும் அணி அணியாக இராச மாபுரத்தே உரிய நாளில் வந்து சேர்ந்தனர். து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/56&oldid=1483797" இலிருந்து மீள்விக்கப்பட்டது