பக்கம்:சீவகன் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 57 யின், இளையவளது யாழ் வாசிப்பினைப் போல மைந்தர் விரையப் பாடுக,' எ ன்றாள். தத்தையும் யாழைக் கையி லேந்தித் தோழியர் கூட்டத்திடையே இருந்தாள்; பின்பு தன் இனிய குரலோடு யாழிசையும் சேரப் பாடினாள். அவள் பாடிய திறனைத் தேவர், 'கருங்கொடிப் புருவ மேறா கயல்நெடுங் கண் ஆடா அருங்கடி மிடறும் விம்மாது அணிமணி 179 தோன்றா இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னுளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்.' (658) என நயம்பட விளக்குகின்றார். அவளது பாடலைக்கேட்ட பலரும் கருத்திழந்தனர். எனினும், ஒவ்வொருவராக அவளை அடைய வேண்டும் என்னும் விருப்பத்தால் தாம் தாம் யாழில் சிறந்தவர் என்று கூறி, அங்குள்ளோர் அனைவரும் யாழ் வாசிக்கச் சென்று று, முடியாது தோற்று, வெட்கத்தோடே தத்தம் இருக்கை புக்கனர். மேலும் வாசித்து வெற்றி கொள்வார் எவரும் இலராயினர். அந் நிகழ்ச்சி கண்ட கட்டியங்காரனும் 'இவளை வெல்வான், வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமனே, என்று கூறி, 'இவ்வுலகில் யாரும் இல்லையோ?' என வினவினான். ஒருவர் பின் ஒருவராக அரசரும் அந்தணரும் வணிகரும் பிறரும் வாசித்துச் சோர்ந்தனர். இவ்வாறே நாட்கள் ஆறு முடிந்துவிட்டன. சீவகன் தோற்றம்: நகரின் மாட் று இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டறிந்தான் அந் ஒரு புறத்தே இருந்த சீவகன்; தான் அவ் வீணைப் போருக்குச் சென்று வெற்றிகொள்ளலாம் என் நினைத்தான்.எனினும், தான் பெற்றோர் உத்தரவின்றிச் செல்லலாகாது எனத் தன் தோழனாகிய புத்திசேனனை அனுப்பிக் கந்துக்கடன் உத்தரவு பெற்று வருமாறு பணித்தான். அவனும் அவ்வாறே சென்று, சீவகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/58&oldid=1483795" இலிருந்து மீள்விக்கப்பட்டது