பக்கம்:சீவகன் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 சீவகன் கதை செய்ய விரும்பியதைக் கந்துக்கடனுக்கு உணர்த்தினான். கந்துக்கடனோ, அச்செயல் சிறந்ததாயினும், முன்னமே அனங்கமாலை என்னும் பரத்தை காரணமாகக் கட்டியங் காரன் சீவகன்மேல் சீற்றமுற்று அவனைக் கொல்லக் காலம் பார்த்திருப்பதைக் கூறித் தனியாகச் செல்லாது தக்க பாதுகாவலோடு படை அமைத்துச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தினான் தான் விரும் அனங்கமாலை, தன்னைச் சீவகன் விரும்பாத இடத்தும் அவனிடம் விருப்புற்று நின்றதை அறிந்த கட்டியங்காரன் அவனைக் கொல்லக் காலம் பார்த்திருந் தான் போலும்! பிய தந்தையின் கட்டளைப்படி தன் இளைஞரும் சேனை யும் சூழச் சீவகன் தத்தை தங்கிய அழகிய மண்டபத் தைச் சென்றடைந்தான். அவன் தன்னை அழகுபடுத்திக் கொண்டு செல்வதைச் சிறப்பிக்கின்றார் தேவர்: 'இரும்பறக் கழுவி யெஃகின் இருளற வடிக்கப் பட்ட அரும்பெறற் சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப் பெருந்தகைக் குருசில் கொண்டு பெருவலம் சுடர வீக்கித் திருந்திழை மகளிர் வெஃகும் தேவிளங் குமரன் ஒத்தான்.' (698) என்கிறார் தேவர். முருடன் இவ்வாறு அழகிற்சிறந்தானாய்ப் பல ளைஞரும் பிறரும் உடன் சூழ்ந்து வர மணமண்டபத்தை அடைந் தான் சீவகன். கண்டார் பலரும் தத்தைக்கு அவனே ஏற்றவன் என்றனர். சிலர் அவனை மணக்கத் தத்தை தவம் செய்திருக்க வேண்டும் என்றனர். அவர்தம் சொற்கேட்ட கட்டியங்காரனோ, உளம் பொறாது வருந் தினான். சீவகன் ஒன்றையும் நோக்கானாய்ப் பாடற்கு அமைந்த உயரிய பீடத்துமேல் சென்று அமர்ந்தான். அமர்ந்த அக்காட்சி, தேவர்க்கு உதய சூரியனை நினை ஆட்டிற்று. உயரிய பீடத்தமர்ந்து, ஒரு முறை அனை வரையும் நோக்கினான் சீவகன். அவனை நோக்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/59&oldid=1483799" இலிருந்து மீள்விக்கப்பட்டது