பக்கம்:சீவகன் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை


           பிறப்பும் வளர்ச்சியும்

தமிழ் இலக்கியம்;

தமிழ் நாடு காலத்தால் முந்தியது; கருத்தால் வளமையுற்றது; சீலமும் செம்மையும் குடி கொண்டது. தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்று வாழ்ந்தார்கள். அவர்கள் உள்ளொளி பெருகிற்று; உணர்ச்சி பெருக்கெடுத்தது; 'யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக!' என்ற வள்ளன்மை தழைத்தது. அந்த வள்ளன்மையில் தோன்றிய இலக்கியங்கள் பல.

தமிழ் நாட்டில் எத்தனையோ இலக்கியங்கள் தோன் றின. அவற்றுள் சிலவே காலமென்னும் சூறாவளியை வன்று இன்றளவும் வாழ்கின்றன. தமிழர்தம் பழங் கால இலக்கியங்கள் பெரும்பாலும் அவர்தம் வாழ்க்கை யொடு பொருந்தியனவாய் உள்ளன. அத்தகைய வாழ் விலக்கியங்கள் இன்று மட்டுமன்றி என்றென்றும் நிலைத்து வாழும் என்பது து உறுதி.


சங்ககால இலக்கியங்கள் பெரும்பாலும் தொகுப்பு நூல்களேயாகும். காலத்தாலும், இடத்தாலும், பிறவற் றலும் வேறுபட்டு வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடல் களைக் கருத்துப்படி வெவ்வேறாகப் பிரித்தனர். பிரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/6&oldid=1483958" இலிருந்து மீள்விக்கப்பட்டது