பக்கம்:சீவகன் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



60 சீவகன் கதை

சீவகனுக்கு பான் இருந்தாள்' (730) என்று அவள் நிலையைக் காட்டுகின்றார் தேவர். தன்னைச் உரிமையாக்க விழைந்த தத்தை, யாழ் எடுத்தாள்; எனினும், முன்னைப் பாடிய நிலையிலிருந்தெல்லாம் அவள் வேறுபட்டுத் தோன்றினாள்; ஏதோ பாடவேண்டுமென்று பாடினாள். வீணை வழிக் கை சென்றது. எனினும், சீவகன் வெற்றியுறத் தான் தோற்று அவனை அடைய எண்ணிய தன் எண்ணத்தின் வழியே அவள் அவ்வீணைப் போரில் சீவகனுக் குத் தோற்றாள். 'பண்ணென்று பாட லதுவொன்று பல்வளைக்கை மண்ணென்று மெல்விரலும் வாணரம்பின் மேல்நடவா விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே.' (735) என்கிறார் தேவர். ஆம்.வீணைத் தலைவியாகப் போற்றப் பட்ட காந்தருவதத்தை என்பாள், தானும் தன் கலை நலமும் வீணைச் செல்வமும் எல்லாமும் சீவகனுக்கு உரிமையாகும்படி தோற்றாள். அவள் சீவகன் உடைமையானாள். அவள் தோழியரும் போர் முடிந்தது என் திரையை வீழ்த்தினர். ஆனால்...

கட்டியங்காரன் கொடுமை:


சீவகன் வீணைப் போரில் வென்று பெறுதற்கரியளாகிய காந்தருவதத்தையின் காதலனாகியதை அறிந்த கட்டியங்காரன்,மனம் புழுங்கினான். அருகிலிருந்த அரசர் கூட்டமும் அலக்கணுற்றது. அரசர் யாவரும் ஆற்றா ராய் அடங்கியிருந்த அந்த வேளையில், யாரோ ஒருவன் வீணையில் வென்று பெண்ணருங்கலத்தைப் பெற்றுச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர்தம் முகத்தோற்றம் அறிவுறுத்திற்று. அதைக் குறிப்பால் உணர்ந்த கட்டியங்காரன், அனைவரையும் சீவ வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/61&oldid=1484637" இலிருந்து மீள்விக்கப்பட்டது