பக்கம்:சீவகன் கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 சீவகன் கதை பெடையோடு வாழின், அது கண்டு உறுமும் புலியும் உண்டோ? சீவகனும் தத்தையும் சேர்ந்த பின் காமனும் கலங்கி ஓட வேண்டுமே!இனித் (தத்தையிடமிருந்து சீவ கனைப் பிரித்தல் இந்திரனாலும் ஆகாது.) மேலும், இதோ கட்டியங்காரன் இப்போது உங்களைச் சீவகன்மேல் ஏவிப் போர் மூட்டிப் பின்பு உங்களையும் அவள் காரணமாகவே வேறு செய்து கொன்று குவித்துப் பின்னர் உங்கள் நாடுகளையெல்லாம் ஒருசேர ஆளத் திட்டமிட்டிருக்கிறான் போலும்! அஃது உணராது நீங்கள் போர் தொடுக்கி றீர்கள்,' என்றான். அனைத்தையும் கேட்டும் அரசர் தமது போர்ச் செய லில் பின் வாங்கினாரில்லை. எனவே, பதுமுகன் மேலும், 'எங்கள் சொல்லாற்றலன்றி வில்லாற்றலையும் காணுங் கள்!" என வில்லை வளைத்து நாணேற்றினான். அதே வேளையில் திரையினுள் தன்னைத் தழுவிய தத்தையோடிருந்த சீவகன்,போர்ச் செயல் கேட்டு நடுங் கிய தத்தையைத் தேற்றி, அனைவரையும் நொடியில் வெல்வதாகக் கூறிக் கிளம்பினான். தத்தையோ, “என் பொருட்டுத்தானே இப்பெரும்போர்!' என எண்ணி உளம் நைந்தாள். அவள் கண்ணீர் மாற்றி, அவளைத் தோழியிடம் ஒப்படைத்தான் சீவகன். மன்னர் மலைதல் : தத்தையை விட்ட சீவகன் பதுமுகனைச் சார்ந்தான்; பதுமுகனைத் தத்தைக்குக் காவலாய் இருக்கப் பணித் தான்; பின்பு தான் தன்படையைத் திரட்டி உணர்வூட்டிப் போருக்குத் தயாரானான். அவனைக் கண்ட மன்னர் அவன் வணிகர் குலத்தான் என்பதையும், தாம் அரசர் குலத்தார் என்பதையும் குறிப்பாகவும் வெளிப் படையாகவும் நினைப்பூட்டி, அவனை வெல்வது எளி தெனப் பேசினர். சீவகனோ, 'இவரை வென்று பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/63&oldid=1483804" இலிருந்து மீள்விக்கப்பட்டது