பக்கம்:சீவகன் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 சீவகன் கதை யன அகம் புறம் என்ற கருத்துக்கேற்பவும் அளவு முதலிய வற்றிற்கு அமையவும் அவைகளைத் தொகுத்தனர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கியங்கள். இனி, சங்க காலத்தை ஒட்டித் தனிப்பேரிலக்கி யங்கள் எழலாயின. அவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களே தலை சிறந்தவை. சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு பெருங்காப்பியங்களும் ஒரே காலத்தில் எழுதப்பட்டன. சிந்தாமணியும், வளையாபதியும், குண்டலகேசியுமாகிய மற்றைய மூன்றும் காலத்தால் பிந்தியவை. இவற்றுள் வளையா பதியும் குண்டலகேசியும் முழுதும் கிடைக்கப்பெறாத நூல்கள். சிந்தாமணி ஒரு வாழ்விலக்கியம் ; சீவகன் வரலாற்றை விளக்கிக் காட்டுவது. தமிழ் இலக்கியக் கடலுக்கே கலங் கரை விளக்கமென அது விளங்குகின்றது. சிலப்பும் மேகலையும் காலத்தால் முந்தியவையேனும், அவை அக வற்பாக்களாலான நூல்கள். சிந்தாமணியே விருத்தப் பாவால் ஆக்கப் பெற்ற முதற்பேரிலக்கியம் ஆகும். இன்று தமிழ் நாட்டில் எத்தனையோ இலக்கியங்கள் உலவுகின்றன. கம்பராமாயணமும், சேக்கிழார் பெரிய புராணமும், பிற இலக்கியங்களும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. ஆனால், அவற்றிற்கெல்லாம் பிறப் பிடம் போன்று அமைந்து, விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்த தலைவன் திறங்களையெல்லாம் தொகுத்து எழுதப்பட்ட இலக்கியம் சிந்தாமணியேயாகும். தமிழ் இலக்கியங்களைப் பயில்வார்க்குச் சிந்தாமணியிலுள்ள பல தொடர்களும் அமைப்புக்களும்-ஏன்- சந்தங்களுங் கூடப் பிற்கால இலக்கியங்களில் அப்படி அப்படியே தமிழுக்குச் சிறந்த காலமாயினும், தமிழ்நாட்டுக்கு அதை இடம் பெற்றிருப்பது விளங்காமற்போகாது. சங்ககாலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/7&oldid=1484431" இலிருந்து மீள்விக்கப்பட்டது