பக்கம்:சீவகன் கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



            இராசமாபுரத்தே. 

குணமாலையும் மாறிப் புக்கு இதயமெய்தினமை; மற் றொன்று, மன்னன் கோபத்துக்குச் சீவகன் ஆளானது.

 களிறு தரு புணர்ச்சி :

யானையை இடையிலே காட்டி, அவ்யானையிடமிருந்து தலைவியை மீட்ட தலைவனுக்கே அவளை மணம் செய்விக்க வேண்டும் என்று பேசியதாகத் தமிழ் நாட்டுக் களவியல் நூல்கள் ஒரு துறை அமைத்துள்ளன. இங்குச் சீவகன் முன் தன் சுண்ணம் சிறந்தது என்ற உடனே அவனைப் பற்றி எண்ணிய குணமாலை தன் உள்ளத்தை அவனிடம் ஓட விட்டாள்; அன்று நேரே கண்டு தன்னை மீட்ட பின் அவனையன்றிவேறு ஆடவ மணப்பதில்லையென உறுதி பூண்டாள். சீவகனும் அவளது அழகார் நலத் தைக் கண்ணால் கண்டவுடன் தன்னை அவள் உடைமை யாக்கிவிட்டான். எனவே, இருவரும் ஒருவரையொரு வர் அறியாமலே மாறிப் புக்கு இதயம் எய்தினர்.

   தேவர் இங்குத்தான் களவின் வழி வந்த கற்பு மணத் தைக் கூறுகின்றார். முன் நடந்த இரு மணங்களும் பசு மீட்டமையாலும், வீணையில் வென்றமையாலும் பெற்றமையின், கண்ட பின் கருத்தழிந்து கொண்ட காதல் மணமாகா. (இங்கேயோ, குணமா -லையும் சீவகனும்3 ஒருவரை ஒருவர் கண்டு, கருத்தழிந்து, பின்பு மணம் கொள்கின்றனர்.) எனவே, இத்தமிழ் முறைக் காதல் மணத்தை முதன்முதலாக விளக்க வந்த நிலையிலே தேவர் இதைத் திறம்பட விளக்குகின்றார்.
   தனிமையிலிருந்த குணமாலை தளர்ச்சியுற்று வருந்தி னாள். தோழியர் பல பல சொல்லித் தேற்றினர். அவளோ, சீவகன்பால் ஓடவிட்ட உள்ளத்தால் ஆற்றாது புலம்பினாள். அவன் உருவன்றி வேறொன்றும் காணாமை யின் தான் குருடு ஆயினதாகவும், பிறர்க்கு எடுத்துக் காட்ட முடியாமையால் ஊமையாயின தாகவும் கூறிப் பெண் இனத்தையே வெறுத்துப் பேசினாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/72&oldid=1484547" இலிருந்து மீள்விக்கப்பட்டது