பக்கம்:சீவகன் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



72 சீவகன் கதை அவள் வருத்தங்கண்ட அவளது கிள்ளை, வருத்தத் தின் காரணம் அறிந்தால் தான் உதவுவதாகக் கூற, மக்க ளிடம் உள்ளத்தைத் திறந்து காட்ட மயங்கிய குணமாலை, தன் கிள்ளையிடம் உள்ளத்தை உரைத்தாள். அது உடனே சீவகனிடம் சென்று அவன் உள்ளக் கிடக் கையை உணர்ந்து வருவதாகக் கூறிப் பறந்து சென்றது. கிளி சென்ற அதே வேளையில் சீவகன் பல நிறங் களைக் குழைத்துக்கொண்டு குணமாலையின் உருவத்தை ஓவியக் கிழியில் தீட்டிக்கொண்டிருந்தான். அவ்வேளை யில் அங்குக் காந்தருவதத்தை வந்து அச்செயலைக் கண் டாள். அவள் சீற்றத்துக்கு ஆற்றானாய்ச் சீவகன் அவளை வணங்க, அவள் சீற்றம் தணியாளாய், அவ்விடம் விட் டுச் சென்றாள். அவள் சென்ற பின் சீவகன் மேலும் அவ்வோவியக் கிழியிலேயே உள்ளம் செலுத்தி நின்றான். இவற்றைக் கண்ட அக்கிள்ளை, அவன் அருகில் சென்று, குணமாலை அவனை எண்ணி நைவதைக் கூறிற்று. அந்நிலையறிந்த சீவகன், தன் ஆழியையும், கடிதம் மறைத்து வைக்கப்பட்ட தினைக் கதிரையும் குணமாலைக் குக் கொடுத்தனுப்பினான். கிள்ளையும் பறந்து சென் றது. பின்னர்ச் சீவகன் தத்தையின் மனை சென்று அவள் ஊடலை நீக்கி, இன்பம் நல்கப் பெற்றான். சென்ற கிளியின் செயல் எண்ணி வாடியிருந்த குண மாலையினிடம் அது தான் கொண்டு வந்த கதிரையும் ஆழியையும் கொடுத்தது. அவளும் அவற்றைப் பெற் றுத்தன் காதல் நிறைவேறும் என்பதறிந்து மகிழ்ந்தாள் அவள் இவ்வாறு தனிமையில் தன்னை மறந்து மகிழ்ந்திருந்த வேளையில், அவளது மனநிலை அறியாத பெற்றோர் அவளுக்கு மணவினை ஏற்பாடு செய்தனர்; அவளுக்கு மைத்துனன் முறையிலுள்ளான் ஒருவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/73&oldid=1484470" இலிருந்து மீள்விக்கப்பட்டது