பக்கம்:சீவகன் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74

         சீவகன் கதை


'திங்கள்சேர் முடியி னுனும் செல்வியும் போன்று செம்பொன் இங்குவார் கீழலி னுனும் கோதையும் இருந்த போழ்தில் சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்.' (1083) என்பது தேவர் எடுத்துக்காட்டு. அவ்வாறு சூழ்ந்த நிலையைச் சேடியர் சென்று தம்மை மறந்த சீவகனுக்கும் குணமாலைக்கும் கூறினர். கேட்ட சீவகன் சினந்து வெளி வந்து, வந்தவரை நோக்கி, 'என்ன?'என்றான். அவர்களும் கட்டியங்காரன் ஆணையக் கூறினார்கள். உடனே சீவகன் தன் படைகளைத் திரட்டி அருகிருந்த நந்தட்டனை அழைத்துத் தன் தேரைத் தயாராகச் செய்து போருக்குப் புறப்பட முன்னின்றான். அதை அறிந்த அவன் தந்தை கந்துக்கடன், 'அரசரொடு மாறு கொளல் தகாதது, என எடுத்துரைத்து, அமைதிபெறச் செய்தான். மேலும், சீவகன் தன் ஆசிரியருக்கு ஓர் ஆண்டு வரை தான் வெளிப்படாதிருப்பதாகச் செய்த சபதத்தையும் நினைத்தான்; உடனே அடங்கினான்.வந்த வரும் அவனைப் பிணித்து நடத்திக்கொண்டு பற்பல தெருக்களையும் கடந்து, அரண்மனையை நோக்கிச் செல் வாராயினர். கட்டுண்ட சீவகன்: சீவகன் பிணிபட்ட கோலத்தோடு அவ்விராசமா புரத் தெருவழியே செல்லுவதை நகர மக்கள் பலரும் கண்டனர்; நைந்தனர். ஆடவரும் பெண்டிரும் அணி அணியாய் நின்று வருந்திப் பேசலுற்றார்; மனத்தின் வருத்தமிக்கு வாட டலுற்றார். இராமர் காடு செல்லும் காலத்து அயோத்தி மக்கள் அடைந்த அவலநிலையைக் கம்பர் பலபடப் பேசியதைப் பலரும் அறிவர். ஆனால், அவர்கள் அந்தக் கம்பப் பேராறு இந்தச் சிந்தாமணி. யென்னும் மலையிடைப் பிறந்த ஒன்று என்பதை அறி யார். பலப்பல இடங்களில் கம்பர் தேவரை அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/75&oldid=1483949" இலிருந்து மீள்விக்கப்பட்டது