பக்கம்:சீவகன் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாபுரத்தே


                                            75

பின் பற்றியிருக்கின்றார். அவற்றுள் இவ்விடமும் ஒன் றாகும். நகர மாந்தர் பலரும் கலந்து வருந்த, அவர் தம் அழுகை ஒலி தொடரச் சீவகன் தெரு வழியே செல்ல லானான். ' நீரகம் பொதிந்த மேக நீனிற நெடுநல் யானைப்

  போர்முகத் த் தழலும் வாட்கைப் பொன்னெடுங் 
  குன்றம் அன்னுன்

ஆர்கலிசீருறுதல் சிந்துபின் செல்லச் செல்வான் புண்ட சிங்கம் ஒத்தான்.' (1116) என்று அவன் நிலையை எண்ணிப் பாடுகின்றார் தேவர். சீவகன் இவ்வாறு நெடுந்தெரு வழியே சென்று அரண்மனை சேர்வதன் முன் அவன் தந்தையாகிய கந் துக்கடன் விரைந்து கட்டியங்காரனிடம் சென்று, தன் மைந்தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டினன்; ஒரு பெண்ணைக் கொன்றது பட்டத்து யானை!' என்ற பழி உண்டாகாதவாறு அதைத் தடுத்தது குற்றமாயின், அதனைப் பொறுத்தல் வேண்டினன். ஆனால், கட்டியங் காரனோ, அதே யானையின் கொம்பால் சீவகன் மார்பைப் பிளந்து பழி தீர்ப்பதாகச் சீறிக் கூறினான் அது கேட்ட நாய்கனும் செய்வதறியாது திரும்பிச் சென்றான். திரும்பி வந்த கந்துக்கடனைக் கண்ட அவன் மனைவி சுநந்தையும் மருகி குணமாலையும் நிகழ்ந்ததைக் கேட்டு வருந்தினர். கந்துக்கடன் சீவகனுக்கு முன் ஒரு முனி வன் அளித்த வாக்கால் யாதொரு துன்பமும் நேராதென் பதை எடுத்துரைத்தான். முனிவன் கூறிய வாக்காக, 64 நிலவுறழ் பூணி னுானை நெடுநகர் இரங்கக்கையாத்து

அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில்                                             
 குலவிய புகழி னுானைக் கொண்டுபோம் இயக்கன், அஞ்சல்!                                          சிலபகல் கழிந்து காண்டி; சிந்தியீ 'ெதன்று 
  சொன்னன்.' (1131)                                                                                எனத் தேவர் எடுத்துக் காட்டுகின்றார். அதைக்கேட்ட மாமியும் மருகியும் ஒருவாறு வாட்டம் நீங்கியிருந்தனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/76&oldid=1484767" இலிருந்து மீள்விக்கப்பட்டது