பக்கம்:சீவகன் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை


78 சீவகன் கதை

தான் என்று மகிழ்ந்தான். இங்கே தேவர் மிகச் சிறந்த முறையில் சீவகன் புகழைக் கட்டியங்காரன் கூற்றினாலேயே காட்டுகின்றார். பகைவனைப் புகழ முடியாது. அவன் தோற்றமும் ஏற்றமும் கண்டு புழுங்கிய கட்டியங்காரன் உள்ளம், அவன் இறந்தான் - என்ற உடனே வடித்தது. உள்ளது புறத்ததாயிற்று. உதிர்ந்தன சொற்கள். இதோ அவைகளைக் கோத்துத் தருகின்றார். தேவர்: "அருள்வலி ஆண்மை கல்வி அழகுஅறிவு இளமை ஊக்கம் திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம் ஒருவர்இவ் வுலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்? பெரிதுஅரிது; இவனைக் கொன்றாய்; பெறு'ெகனச் சிறப்புச் செய்தான்.' (1165)

என்ற பகைவனது பாராட்டு சீவகனது ஏற்றத்துக்கு மணி விளக்காய் நிற்கின்றது. ஆம். சீவகன் எங்கே சென்றான்? III இயக்கர் நாடு சென்ற பின்

சுதஞ்சணனுடன் :

தன் நண்பனாகிய சீவகனுக்கு உற்ற இடர் நீக்கி, அவனைத் தனது நாட்டிற்கு அழைத்துச் சென்ற சுதஞ் சணன், அவனுக்குத் தன்னாட்டின் சிறப்புக்கள் பல வற்றையும் காட்டினான்; தன்னோடே சில நாள் இருக்கக் கேட்டுக்கொண்டான். வகனும் உயிர் காத்த நண்பனுடைய வேண்டுகோளின்படி அவ்வியக்கர் நாட்டிலே தன் நண்பனோடு சில நாள் தங்கி, அந்நாட்டு நலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/79&oldid=1484632" இலிருந்து மீள்விக்கப்பட்டது