பக்கம்:சீவகன் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மந்திரங்களை உணர்த்த நினைத்தான். ஆம். தன்னை நற் கதிக்கு அனுப்பிய-நாயின் உருவம் மாற்றி நல்ல உரு நல்குதற்கு உரித்தான மந்திரம் உபதேசித்த - நண்பன் சீவகனுக்கு அவன் அந்த மூன்று மந்திரங்களை உப தேசிக்க நினைத்தது பொருத்தமன்றோ? அம்மூன்று மந் திரங்களுள் ஒன்று, காமனும் போற்றும் சரீரத்தைக் கொடுப்பதாகும்; மற்றொன்று, பாம்பு முதலியவற்றின் விடங்களை நீக்குவதாகும்; மூன்றாவது, வேண்டியவாறு உடல் மாற்றம் பெறுவதாகும். இவ்வகை மந்திரங்களைத் தந்து, வழிகளின் வளங்களையும் பிறவற்றையும் கூறிய பின் சீவகனைச் 'சென்று வருக!' என்று வாழ்த்தி வழி யனுப்பினான் சுதஞ்சணன். இயக்கர் பலரும் 'சீவகன் வாழ்க!' என்று வாழ்த்தி நின்றனர். தன் நண்பனிடம் பிரியா விடை பெற்ற சீவகன், அனைவரையும் வணங்கி, மேலும் தான் செய்ய வேண்டு வன பல இருப்பதால் அவர்களைப் பிரிந்து தன் வழியே தனிமையில் புறப்பட்டான். அவ்வாறு சீவகன் புறப் படும் போது, அவன் செல்லுமிடத்துப் பன்னிரண்டு திங் கள் வெளியிலே திரிந்து, சில மனைவியரை மணந்து, பின்னர்த் தன் நாடுசென்று, கட்டியங்காரனைக் கொன்று, அவனது ஆட்சியையும் பெறுவான் என்றும் சுதஞ்ச ணன் எடுத்துரைத்தான். அதையும் கேட்டுத் தன் வினை மேல் செல்லப் புறப்பட்டான் சீவகன்.

வேடனுக்கு அறிவுரை :

ஒரு காட்டு வழியே சீவகன் சென்ற போது, ஒரு வேடுவன் எதிர்ப்பட்டான். அவன் சீவகனை நோக்கி, யாரோ வழிப்போக்கன் என்று கருதிச் சூறையாட நினைத் திருப்பான் போலும்! அருகில் வந்தான். எனினும், அவன் கொடுமை ஒன்றும் செய்யவில்லை; சீவகன் தோற் றத்தையும் பிறவற்றையும் கண் ஒரு வேளை மயங்கி யிருக்கக்கூடும். சீவகன் வந்த வேடனை ‘நீ யார்?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/81&oldid=1484582" இலிருந்து மீள்விக்கப்பட்டது