பக்கம்:சீவகன் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

               சீவகன் கதை

நின்ற சீவகன் தன்னை மறந்து அவ்விறைவனைப் பாடினான்:

‘உலகம் மூன்றும் உடையோய்நீ ஒண்பொன் இஞ்சி எயிலோய்நீ திலக மாய திறலோய்நீ தேவ ரேத்தப் படுவோய் நீ அலகை யில்லாக் குணக்கடலே! யாரும் அறியப் படாய்ஆதி கொலையில் ஆழி வலன் உயர்த்குளிர்முக் குடையின் நிழலோய்நீ.' (1244) என்று பாடியது அவன் வாய். அவன் இன்னும் பலவாறு புகழ்ந்து போற்றி அத்தேவனது நல்லருளைப் பெற்றுப் பின் பல்லவநாடு சென்றடைந்தான். பல்லவ தேயத்தில் விடநீக்கம்: பல்லவ தேயத்தை அடைந்த சீவகன், அந்நாட்டின் தலை நகராகிய பல வளங்களும் நெருங்கிய சந்திராபம் என்னும் நகரைச் சென்று சேர்ந்தான்; சேர்ந்து, அந்நகர் வளம் பலவும் கண்டு, மிகச் சிறந்திருந்த ஒரு சோலையின் ஒரு புறத்தே தங்கியிருந்தான். சீவகன் சோலையின் ஒருபால் தங்கியிருந்த போது, அச்சோலையிலே பல மகளிர் வந்து பல்வகை விளையாடல் களைப் புரிந்தனர். அவருள் ஒருத்தி மிகச் சிறந்தவளாய், இனிய பல ஆடல்களைப் புரிந்தாள். அவளுடைய நல் லாடலைக் கண்டு தீயிடை வெண்ணெயென ஆடவர் மன முருகினர். அவளது ஆட்டம் அனைவரையும் மயக்கிற்று. வ்வாறு அனைவரையும் மயக்கித் தன்னையும் மறந்து ஆடிய அப்பேதை, தூரத்தே நின்ற சீவகனை நோக்கி னாள். நோக்கிய நோக்கே அவளுக்கு உள்ளத்தே உணர் வைத் தூண்ட, அவள் தன் நிலை இழந்தாள்; காம வயப் பட்டாள்; கருத்து மாறினாள். எனவே, ஆட்டமும் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/83&oldid=1484473" இலிருந்து மீள்விக்கப்பட்டது