பக்கம்:சீவகன் கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 சீவகன் கதை பிறரும் அறியா வண்ணம் அவ்வூரை விட்டே நீங்கிச் சென்றுவிட்டான். அவன் சென்றதைப் பின் விழித்து அறிந்தாள் பதுமை. மற்றவரும் அறிந்தனர். இருதலைப் புள்ளின் ஓர் உயிராய் இருந்த இருவருள் பிரிவு நேரின், அது பொறுத்தற்கெளிதோ! தன்னையே மறந்து நின்ற தையலாம் பதுமை, காதலனைப் பிரிந்த நிலையில் பெரிதும் கவன்றாள். அவளுடைய காதல் தோழியரும் பிற பெண் டிரும் அவளைப் பலவாறு தேற்றினர். அவளோ, அவ னையே எண்ணி எண்ணி ஏங்கினாள்; தன்னைத் தேற்று வாரைச் சீறினாள்; ஊணும் உறக்கமும் அகற்றினாள். இவ்வாறு பலரும் தேற்றத் தேறாளாகிய அவளை கிருந்து ஆற்றத் தொடங்கினள் ஓர் உயிர்த்தோழி; அவள் காதலின் தன்மையையும், அதனால் உண்டாகும் தீங்குகளையும், பிரிதற்றுன்பமும் பின் கூடும் இன்பமும் எத்தகையன என்பதையும் எடுத்துக் கூறித் தேற்று வாளாயினள்: மேலும், சீவகன் பிரியுமுன் அப்பிரிவைக் குறிக்கவில்லையோ எனக் கேட்டாள். பதுமையோ, முன் னாள் சீவகன் கூறியதைக் கூறினாள். அவள் கூறியது, • வீனைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரம் நினைத்து நீங்குதல் ஆண்கடன்; நீங்கினால் கனைத்து வண்டுஉணுங் கோதையர் தங்கடன் மனைக்கண் வைகுதல் மாண்பொடு' எனச்சொனுன்.' (1400) என்பதாகும். இக்கருத்தைக்கொண்டே அவன்திரும்பி வருவான் என்பதை விளக்கிக் காட்டினள் தோழி. பதுமை ஒரு வாறு தேறியிருந்தாள். இது நிற்க. மகள் வருத்தம் காணப்பொறாத மன்னவன், சீவ கனைத் தேடித் தருமாறு பலரைப் பலபல திசைகளிலும் போக்கினான். சென்றவர் பலரும் சீவகனைக் காணா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/87&oldid=1483851" இலிருந்து மீள்விக்கப்பட்டது