பக்கம்:சீவகன் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும

திரும்பினர். ஒருவன் அவன் இருக்கும் திசையிலே சென்று அவனைக் கண்டான். எனினும், சீவகனை அறிந்துகொள்ள அவனால் இயலவில்லை. யாராவது தன்னைத் தேடி வருவது உறுதி என்றறிந்த சீவகன், உரு மாற்றும் மந்திரத்தினால் தன் உருவினை வேறு வகையில் மாற்றி, அங்கு அமர்ந்திருந்தான். அவனிடம் வந்தவன், 'சீவகன் இவ்வழிச் செல்லக் கண்டனையோ?' எனக்கேட்டான். சீவகன் வேறொன்று விளங்கக்கூறாது,

‘நெய்கனிந் திருண்ட ஐம்பால் நெடுங்கணுள் காத லானை
ஐயிறு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் இப்பால்;
பொய்யுரை யன்று காணீர்! போமினம் போகி நுங்கள்
வருமையலிங் களிற்று வேந்தன் மைந்தனுக்குரைமின்,'என்றான்

பத்துத் திங்களில் வருவான் என்பதை அறிந்தவன் உடனே திரும்பி வந்து மன்னனுக்கும் மற்றவர்களுக்கும அதைச்சொல்ல, அனைவரும் ஆற்றியிருந்தனர். பதுமையும் நாள் எண்ணி நோற்று இருந்தனள்.

கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்

அருகனை வணங்கினான்: பதுமையின் தந்தையால் அனுப்பப்பட்ட ஏவலாள னுக்குப் பதில் கூறி அனுப்பிய பின் சீவகன் மேலே தொடர்ந்து நடந்தான்; நாட்டையும் மலையையும் கடந்து சென்றான்; ஆண்டோர் இடத்தே அருகதேவனை வணங் கிப் பக்கத்திலுள்ள தாபதர் பள்ளியைச் சார்ந்து, அவர் களுடைய அறவுரைகளைக் கேட்கலானான்; அவர்களுக்கு அவர்கள் வேண்டுகோளின்படி மக்களாய்ப் பிறந்தவர் கள் பெற வேண்டிய-பயன்களையும், பிறவா நெறியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/88&oldid=1484277" இலிருந்து மீள்விக்கப்பட்டது