பக்கம்:சீவகன் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 திரன் சீவகனை அழைத்துக்கொண்டு தன் இல்லம் வந்து சேர்ந்தான். கேமசரி,

கண்ணுறக் காளையைக் காண்டலும் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன; மாமையும் அழகு.
உண்ணிறை நாணும் உடைந்தன; வேட்கையும்
ஒண்ணிறத் தீவிளைத் தாள்உருக் குற்றாள்.(1472)

ஆயினாள். சீவகனும் அவள் அழகினைக் கண்டு தன் நிலை கெட்டான். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர். கேமசரியோ, நாணத்தால் தலை வணங்கினாள். அந்நிலை யறிந்த அனைவரும் மகிழ்ந்தனர்; அவளை அவனுக்கு மணம் புரிய ஏற்பாடு செய்தனர். சுபத்திரன் தன் மக ளைக் கரக நீரினால் சீவகனுக்கு உரிமையாக்கினான். வரும் தம்மை மறந்து, உலகை மறந்து, இரு பத் துறை யில் மூழ்கிக் களித்தனர். அவர்கள்,

'காதலும் களிப்பும் மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார்ப
சாதலும் பிறப்பும் இல்லாத் தன்மைபெற் றவர்கள் ஒத்தார்.' (1494)

இருவருடைய காதற்பண்பையும் சில பாடல்களால் நன்கு விளக்குகிறார் தேவர். விரைவில் சீவகன் அவளை விட்டுப் பிரிகின்ற காரணத்தால், இருக்கும் சில நாளில் எல்லையற்ற இன்பம் துய்த்தார்கள் என்பதைக் காட்டு கிறார். சில நாட்களே சீவகன் கேமசரியோடு சேர்ந்திருந் தான்; பின்னர் ஒரு நாள் இரவு ஒருவரும் அறியா வகை யில் அவளை உறக்கத்தில் பிரிந்து, தன் வழிச் செல்ல லானான்.

பிரிவின் வெம்மை:

உறங்கி எழுந்த கேமசரி, காதலனைக் காணாது கதறி னாள் : அரற்றினாள். அனைவரும் அறிந்தனர்; தேடினர். பலன் இல்லை. சீவகன் இனித் தன் வினை முடித்தன்றோ கேமசரியைக் கைக்கொள்வான்? அவள் வாட்டம் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/91&oldid=1484609" இலிருந்து மீள்விக்கப்பட்டது