பக்கம்:சீவகன் கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



                  கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்
                                                                95

நிகழ்ச்சி கண்ட அரசகுமாரனான விசயன் பெரிதும் வியந் தான். அப்பழம் பல நாட்களாக அவன் வீழ்த்த எண்ணி யும் இயலாது உச்சியிலே கனிந்து நின்ற ஒரு பழம் போலும்! ஆகவே, சீவகன் மிக எளிதாக வில்லை எடுத்து எய்தமை அவனை வியப்பில் ஆழ்த்தியது. ‘ஏ ழு மரா மரங்களையும் ஓரம்பால் எய்த இராமனினும் இவன் மேலாவன்,' என்று இயம்பி, விரைந்து தன் அரசமாளி கைக்கு அழைத்துச் சென்றான் விசயன்.

             ‘வண்சிலை கொண்ட வாறும்
                 வார்கணை தொடுத்த வாறும்
              கண்கணை வைத்த வாறும்
                  கற்செய்தோள் இருந்த வாறும்
              திண்சரம் விட்ட வாறும்
                   சென்றகோல் போந்த வாறும்
              கண்டெலாம் வியந்து நோக்கி
                  ‘வில்லுடைக் கடவுள்' என்றான்.'
                                                      (1642)
       விசயன் பின்னர் அவனைத் தன் அரண்மனையில் தனியிடத்திருத்தி, வந்த வருத்தம் தீர வேண்டிய உப சாரங்களைச்செய்து, தன்னுடனிருக்குமாறு வேண்டினான்; பின்பு தன் தந்தையாகிய தடமித்தனுக்கு அவன் புகழெ லாம் விளங்கக் கூறினான். அரசனா கிய தடமித்தன், சீவகன து வில்லாற்றலையும் பிற சிறப்புக்களையும் கேட்ட றிந்து, பலவாறு அவனைப் போற்றிச் சிறப்புச் செய்த தோடு, அங்கேயே தங்கித் தன் மக்கள் ஐவருக்கும் வில் வித்தையையும் பிறவற்றையும் கற்பிக்க வேண்டிக் கொண்டான். சீவகனும்,செல்ல வேண்டிய காலம் சிறிதே இருத்தலின், அங்கேயே தங்கியிருக்க இசைந்து, அரச மக்களுக்கு அன்பனும் ஆசிரியனும் ஆயினான். 

கனகமாலையின் காதல்:

     சீவகன் அரசமக்களுக்கு ஆசிரியனாய் இருந்த வேளை யில் பருவ மாறுதல் உண்டாக, வசந்த காலமும் வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/96&oldid=1483903" இலிருந்து மீள்விக்கப்பட்டது