பக்கம்:சீவகன் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

சீவகன் கதை

இங்குத் தேவர் வசந்தச் சிறப்பைச் சிறிது விளக்குகிறார். அவ்வசந்த மலர்களையெல்லாம்கொண்டு சீவகன்கோத்த மாலையும் செண்டும் மகளிரை மையல் செய்தன என்பதை அடுத்து விளக்குகின்றார் தேவர். அவன் ஒரு நாள் தனி யிடத்தே இருந்து, வசந்த மலர்கள் பலவற்றையும் கொண்டு குவித்து, நறுமலர்களால் அழகாக மாலையும் செண்டும் செய்து முடித்தான். அக்கலையில் வல்லவனான சீவகன், அதில் தன் கலை நலமெல்லாம்பெய்து அம்மாலை யும் செண்டும் காதல் வார்த்தை பேசும் கடிதங்களாக அமையுமாறு செய்தான். ஆம். அதே வேளையில் அங்கு வந்த அரசகுமாரியான கனகமாலையின் தோழி, அம் மாலையின் அழகு கண்டு, மாலையையும் செண்டையும் விரும்பிப்பெற்று, மன்னவன் மகளிடம் சேர்த்தாள். அம் மாலையும் செண்டும் கனகமாலையிடம் என்ன பேசினவோ, யாம் அறியோம்! அவைகளே அவள் உள்ளத்தில் காதல் விதையைத் தூவி அவளைச் சீவகன்பால் மையலுறச் செய்தன.

          மாலை வழியே மையலுற்ற கனகமாலையின் காதல் வளர்ந்த நிலையினைத் தேவர் பல பாடல்களால் பேசு கின்றார். அவளது அந்த நிலையினை அறிந்த அனங்க விலா சினி என்னும் தோழி தேற்ற வேண்டியவாற்றால் தேற் றினாள் ; மேலும், அவள் விழைவை நிறைவேற்றும் வழியையும் தேடலானாள். ஆம். கனகமாலை, தனக்கு அனங்க விலாசினி தூதாக அமைய, மாலை தெப்பமாக அமைய, நாள் எண்ணிக் காதல் கைகூடும் பொழுதை எதிர் நோக்கியிருந்தாள். சீவகனும் அவளிடம் கா ாதல் கொண்டு காலம் பார்த்திருந்தான் போலும்! இது நிற்க.
       தன் மைந்தர் சீவகன் வழிக் கற்ற வித்தையை நேரில் விழைந்தான் மன்னன் தடமித்தன்; 'அனைவரும் வருக,' எனப் பணித்து, ஓரிடத்திருந்து அவர்தம் ஆற்ற
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/97&oldid=1484062" இலிருந்து மீள்விக்கப்பட்டது