பக்கம்:சீவகன் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98

                             சீவகன் கதை

வேளை உண்மை புலப்படும்,' என எண்ணி, அவள் வாழும் அந்தப்புரம் சென்றான். அவன் சென்ற வேளையில் தன் உயிருக்கு உற்ற துணையாய் உள்ள வீணையைக் கையிடை வைத்து, பண்ணினைப் பாடிக்கொண்டிருந்தாள் தத்தை. பாட்டில் சீவகனைப் பிரிந்த தனிமை ஒலித்தது; அவளது தளர்ந்த உள்ளம் விளங்கிற்று; வருத்தத் திலே பாட்டிடையில் தாழ்ந்து வணங்கினாள்; அந்த வருத்த உச்சியில் தன் விஞ்சையால் சீவகன் சென்ற நெறியெலாம் சிந்தித்தாள். அச்சிந்தனை முடிவும் நந்தட் டன் நுழைவும் ஒன்றாயின.

      புகுந்த நந்தட்டன், தத்தையைத் தலை நிமிர்ந்து நேர் நோக்காது, தன் தமையன் மனைவி என்ற அன்பு உளத்தாலே அடி ஒன்றையே நோக்கி வீழ்ந்து பணிந்து, எங்குள்ளார் அடிகள்?' என்று கேட்டான். நந்தட்டன் தத்தையை நோக்கிய நோக்குப்பற்றித் தேவர் கூறுவ தைத்தான் கம்பர் இலக்குவன் சீதையை நோக்கியதாக எடுத்துக் காட்டுகின்றார். ஆம். அவன் நிலையை,
            *செங்கயற் கண்ணி னுள்தன்
                 சீறடிச் சிலம்பு நோக்கி
            ‘எங்குளார் அடிகள்?' என்னு
                  இன்னணம் இயம்பி னே.’
                                                             (1705)

என்று தேவர் எடுத்து விளக்கிப் பிறன்மனை நோக்காப் பேராண்மையை நன்கு காட்டுகின்றனர். இவ்விதையே கம்பர் காவியத்து மரமாகிக் கனிந்துள்ள து.

     உள்ளத்தால் சீவகனை நாடி, அவன் பலரை மணந்து ஏமமாபுரத்துக் கனகமாலையைக் கூடிய யினைத் தன் விஞ்சையால் உன்னி அறிந்து வருந்திய தத்தை, தன் ருத்தம் தோன்ற, 'நம்மை மறந்து பலரை மணந்து இன்பத்துள்ளாரை நாம் ஏன் நினைக்க வேண்டும்?” என்று நைந்து கூறினாள். பின் ஒரு விஞ்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/99&oldid=1483926" இலிருந்து மீள்விக்கப்பட்டது