பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. குணமாலையார் இலம்பகம் (குணமா?லயார் இலம்பகம் : இது குணமாலையைச் சீவகன் மணந்துகொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம். குணமாலை யும் சுரமஞ்சரியும் நீர்விளையாடச் சென்றதும், அவர்கள் இரு வரும் சுண்ணம் காரணமாகப் பிரிந்து நீங்கியதும், குணமாலை மீராடி வருங்கால் அசனிவேகம் என்னும் அரசுவா மதம் கொண்டு அவளேக் கொல்லச் சென்றதும், சீவகன் அதனையடர்த்து அவளைக் காத்ததும், அதுவே வாயிலாக அவள் சீவகன்பால் கருத் தைப் போக்கியதும், கிள்ளையைத் தூதுவிட, சீவகன் மணத்துக்கு இசைந்ததும், குணமாலே மணமும், கட்டியங்காான் சினம் கொண்டு சீவகனப் பற்றி வருமாறு மதனனே ஏவியதும், மத னன் முதலாயினர் அவனேக் கொண்டேகுங்கால் தேவன் இடியும் மழையும் காற்றும் வருவித்து மயக்கி, சீவகனேக் கொண்டேகிய தும், பிறவும் இதன்கண் கூறப்படுகின்றன.) இாாசமாபுரத்தே சீவகன் காந்தருவதத்தையுடன் இனிது இருந்து வருகாளில் வேனிற்காலம் வந்தது. காசறு துறவின் மிக்க கடவுளர் சிங்தை போல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி ஆசற நடக்கும் காளுள் ஐங்கணக் கிழவன் வைகிப் பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான். உoஉ பொழில்களில் மாமும் செடியும் கொடியும் இனிய பூக்களைப் பூத்து நறுமணம் கமழ்ந்தன ; புதுத் தளிரும் இலையும் தழைத்து இனிய நிழல் செய்தன ; தென்றல் பொழில்களில் நுழைந்து போந்து வேனில் வெப்பத்தை உ0:. காசறு துறவு - குற்றமற்ற துறவறத்தில் சிறந்த முனிவ rர். மாசறு விசும்பின் - மாசற்ற வானத்தில். வெய்யோன் . ஞாயிறு. வடதிசை அயணம் - வடதிசைச் செலவு (உத்தராயணம்). முன்னி - கருதி. ஆசற - குற்றம,ை ஐங்கனேக் கிழவன் - காமன், வைகி - வைக: தங்கும்படி, பாசறைப் பரிவு - பாசறைக்கண் தங்கும் வருத்தம். கூதிர் தொடங்கிப் பாடி ఐ4-బోల్షత్రా இளவேனிற்கண் இன்ப நுகர்தற்கு மீள் வாாதலின் பாசறைப் பங் தீர்க்கும் என்ருர். பங்குனிப் பருவம் . இள்வேனில்.