பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் கoக. டுக” என்று சொல்லிவிட்டுச் சென்ருள். தனித்திருந்த குண மாலை யுள்ளத்தே சீவகன் பொருட்டு எழுந்த வேட்கைத் தீ அவளது உள்ளத்தையும் உயிரையும் உடலையும் வெதுப்ப, அவள் பெரிதும் ஆற்ருளாயினள். பின்பு அவள் தனக் குள்ளே பலவாறு கினைக்கலுற்ருள். - குணமாலே பெண் பிறப்பைப் பழித்தல் கையி ல்ைசொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிங்தையின் மூங்கையு மாயினேன் ; செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போல் . உய்ய லாவதோர் வாயிலுண் டாங்கொலோ. உங்.அ கண்ணும் வாள் அற்ற கைவளே சோருமால் : புண்ணும் போன்று புலம்பும்என் நெஞ்சரோ எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே. உங்க இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டிருந்த இக்குன. மாலைக்கு ஒரு நினைவு தோன்றிற்று : தன் கிளியைச் சீவகன் பால் தாதுவிட கினைத்தாள். அதனை அக் கிளியிடம் உரைப்ப, அதுவும் அதற்குடன்பட்டு அவன் இருக்குமிடம் சென்றது. ஆங்கே, சீவகன் அரசுவாமுன் அஞ்சி கடுங்கித் துவண்ட குணமாலை வடிவே அவன் முதன்முதலாகப் பெற்ற காட்சி யாதலால், அதனையே மனக்கண்ணிற் கண்டு பெருவேட்கை உங்அ. கையில்ை சொல்ல - கையாற் காட்டும் சைகையால் மணக் குறிப்பை வெளிப்படுத்த. அவற்றைக் கண்ணுற் கண்டே அறிய வேண்டு தலால், கண்களில் கேட்டிடும் என்ருர். மொய் கொள் சிங்தை - குறை யெல்லாம் செறிவு கொண்ட மனம், மூங்கை ஊமை. செய்தவம் புரியா . செய்தற்குரிய தவத்தைச் செய்யாத. சிறியார் - சிறுமையுடையவர். சிறியார்கள்போல் மூங்கையுமாயினேன் என முடிக்க. வாயில் - நெறி புணர்த்தித் துணை செய்பவர். உங்க. வாள் அற்ற ஒளியிழந்தன. புண்ணும் போன்று புலம் பும் - கெஞ்சம் புண்ணுற்றது போல வருந்தும். எண்ணில் - ஆராய்ந்து பார்க்குமிடத்து. எரிப்பினும் முழுக்க கின்று சுட்டுக் கொளுத்தின லும். மேற் செலாக - மேலொன்றும் செய்தற்கில்லாத. பெண்ணின் மிக்கது . பெண் பிறப்பினும் கொடியது. பெண் பிறப்பின் கொடுமைக்கு ஒப்பதும் மிக்கதும் வேருென்றும் இல்லே என்பதாம்.