பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனப் பொய்யும் கவர் பொருளும் எய்தப் பேசுகின்ருன். பின்பு, பதுமையை நோக்கி, அவளும்ற விடநோய் நீக்கி கலஞ் செய்தவன், அவள் பார்வையால் காமக் கொதிப் பெய்கி, - - போது லாஞ்சிலை யோபொரு வேற்கணுே மாது லாமொழி யோமட நோக்கமோ யாதும் நானறி யேன்அணங் கன்னவள் •r காத லால்கடை கின்றது. காமமே. - என்று தன்னுட் கதறுகின்ருன். இவ்வண்ணமே சென்ற விடமெங்கும் பல மகளிரை மணந்து கூடியவன், சாமஞ்சரி என்பவளையும் தன் தோழரால் 'காம கிலகன்” என்ற சிறப்புப்பெய ரெய்துவதற்காக, வேற்று வடிவம் கொண்டு, சென்று காதற்காமம் சிறந்து கடிமணம் செய்துகொள்ளு கின்ருன். முடிவில் சீவகன், பரி கிருவாணமென்னும் கேவல் ஞானத்தை யெய்கியதையும் ஆசிரியர் கேவல மடங்கை யென்னும் மங்கையைக் கண்ணிமை யாது புல்லி, மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கி குனே' என்கின்ருர். இவ்வாறு காமமே கன்றிய உருவினளுக வரும் சீவகன் பால் அறம் கிறம்பிய காமம் சிறிதும் இல்லை யென்பது: அங்கமா விணேயென்பாள் வரலாற்ருலும், கோவிந்தை யாரைப் பதுமுகனுக்குமணம் செய்த வரலாற்ருலும் விளங்கு கின்றது. மேலும், அந்தணர்க்காக்கிய சோற்றை நாய் கதுவிற்றென அவர்கள் அதனைப் புடைத்துக் கொன்றதும்; அதற்குரிய களிமகன் அந்தணரை அலைத்ததும் சீவகன் கண்டு, அந்தணரைக் காத்தும், களிமகனே விலக்கி பும், காய்க்கு அருமறை வழங்கியும் தன் உயர் குணத்தை வெளிப்படுக்கின்ருன். கேமசரியை மணந்து அவளிடம் சொல்லாது பிரிந்து சென்ற சீவகன் வழிப்போக்கன் ஒருவற்கு. அறம் கூறித், தன் ஆடையணிகலன்களைக் கொடுத்து நீங்கு கின்ருன். இவற்ருலெல்லாம் இவனது அறவுணர்ச்சி விளங்கு மேனும், சிக்கிரகூடத்துத் தவப்பள்ளியில் மகளிரொடு வாழ்ந்த துறவிகட்கும், வழிப்போக்கனுக்கும், பவதத்தனுக் கும் மகளிரின் மனப்புன்மை கூறித் தெருட்டிய இச் சீவகன்,