பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகிப்புரை . குறையாத முறையில் ஒரு சுருக்கப் பதிப்பு இருப்பின், எல்லாரும் எளிதில் படித்தறிந்துகொள்ள உதவியாயிருக்கும். ஆங்கிலம் முதலிய மொழிகளில் இத்தகைய சுருக்கப் பதிப் புக்கள் பல வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழியிலும் அம் முறை பின்பற்றப்படுவதல்ை தமிழ் மொழிக் கல்வி பெருகப் பரவுவதற்கும், முழு நூலேக் கற்க ஆர்வமெழுதற் கும் இடமுண்டாகும். . - '.. இச் சுருக்கப் பதிப்பு, முழு நூலில் ஏறக்குறையக் காற் பங்களவாக வெளிவருகின்றது . இதல்ை, அம் முழு நாம் கருத்தை எல்லாரும் இதன்முகமாக எளிதிற் படித்தறிந்து கொள்ளலாம்.

  • கதைப் போக்குக் கெடாமல் இனிய செய்யுட்களைத் திரட்டிக் கோத்து, இடையிடையே விடுக்கப்பட்ட பாட்டுக் களின் தொடர்பைச் சுருக்கமாக அங்கங்கும் எளிய உரை. நடையில் எழுதிச்சேர்த்து, ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவான உரைக் குறிப்புக்களுங் கொடுத்து விளக்கமான ஒர் ஆராய்ச்சி முன்னுரையோடு இக்நால் பதிப்பிக்கப்பட்டி ருக்கின்றது. பாட்டுக்கள் சீர்பிரித்தும் சந்திபிரித்தும் உரிய தகலப்புக்களுடன் அமைக்கப்பட் டிருக்கின்றன. கச்சினர்க் கினியர் உரையோடு வைத்துப் பயில்வதற்கும் இந்நூலும் உரையும் உதவும். - - ல. இதனை இத்தனே கலம்பெறத் தொகுத்தியற்றியவர், செங் கம் போர்டு உயர்நிலப் பள்ளித் தமிழாசிரியரும் சங்கநூற் இலவருமான வித்துவான் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள். அவர்கட்குத் தமிழுலகம் பெரிதுங் கட மைப்பட்டிருக்கின்றது ; அவர்கட்கு எங்கள் அகமார்ந்த நன்றியைப் புலப்படுத்திக்கொள்கின்ருேம். -

6)J All சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.