பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் _ முன்னுரை பொது சீவக சிந்தாமணி யென்பது சமண முனிவர்கள் தமிழில் செய்துள்ள காவியங்களுள் தலையாயது. தமிழில் வழங்கும் காவியங்களுள் பெருங்காவியம், சிறுகாவியம் என இருவகை யுண்டு. இவை வகைக்கு ஐந்து காவியங்களாகக் கூறப்படும். பெருங்காவியம் ஐந்தனுள், வளையாபதி, குண்டலகேசி என்ற இாண்டொழிய, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை யென்ற மூன்றும் அச்சாகி வெளிவந்திருக்கின்றன. சிறு காவியம் ஐந்தனுள் காககுமார காவியம், யசோதர காவியம் என்ற இாண்டுமொழிய, ஏனை, சூளாமணி, நீலகேசி, உதய னன் பெருங்கதை என்ற மூன்றும் அச்சாகி வெளிவங் துள்ளன ; யசோகா காவியம் நெடுநாட்களுக்கு முன்பு அச்சாகி வெளிவந்ததுண்டு இப்போது கிடைப்பது அரிது ; காக குமார காவியம் கிடைக்கவேயில்லை. தமிழ்மொழிப் பயிற்சிக்கண் இருந்த ஆர்வக்குறைவா 'அம் தமிழ் படிப்பவர் தொகை குன்றி யிருந்ததுடன் தமிழ் ஆால் ஆராய்ச்சி மக்கள் மனக் கண்ணிற்கு உயர்வான் தோன்ருமையாலும் தமிழ் நூல்கள் பல வெளிவரத் தடை புற்றன; வெளி வந்தவை மறுபதிப்பு எய்த மாட்டாது மடியலாயின. இக்காலத்தே தமிழ் நாலாராய்ச்சி சிறிது உயர்வு. பெற்று வருகிறது ; தமிழ் கற்போரும் பெருகுகின்றனர்; மக்கட்கும் தமிழிடத்தும் தமிழ் நூல்களிடத்தும் பற்று உண்டாகி வருகிறது. கிங்கள் வெளியீடுகளும், கிழமை வெளியீடுகளும், காள் வெளியீடுகளும் பல்கி யிருப்ப கொன்றே, ய்ாம் கூறிய கருத்தை வலியுறுத்துவதாம்.