பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுாை - க் வில்லை. சைனர் மட்டில் கேள்வி வழியாகப் பெற்ற ஒரு 'குறிப்பை யுாைக்கின்றனர். + கிருத்தக்க தேவர் சோழர் குலத்திற் பிறந்தவர். இளமையிலேயே தென்மொழி, வடமொழியென்ற இரு மொழியிலும் கிாம்பிய புலமை பெற்றவர். அப்போதே, துறவு பூண்டு சமண்சமயத்துக்குரிய நால் பலவும் கற்றுச் சீரிய சமண முனிவராய் விளங்கினவர், இவர் காலத்தே மதுாையிலிருந்த சங்கப் புலவருடன் இவர் நட்புற்றுப் பழைய தமிழ் நூல்களை இனிதாராய்ந்தனர். அச் சங்கப் புலவர், சமண் சமயத்துப் புலவர் பலர்க்கும் துறவினே வியந்து பாடத் தெரியுமேயன்றி, இன்பச் சுவை கனியப் பாடல் இயலாதுபோலும்” என்றனர். அதுகேட்ட இவர் இச் சீவகசிந்தாமணியை யெழுகி அவர் கருத்து மாறச் செய்தனர்.' இக் கேள்வி வரலாற்றை நோக்கின் இவர் சோழநாட் டவர் என்றும், சோழர் குலத்தவர் என்றும், பாண்டிநாட்டில் தம் புலமை கிாம்பப்பெற்று, இவ்வினிய தமிழ்க் காவி யத்தை யியற்றினர் என்றும் ஒாாற்ருல் உணரலாம். இவர் காலத்திருந்த மதுரைத் தமிழ்ச் சங்கம், சிலப்பதிகாாம் இறையனர் அகப்பொருள் என்ற இவற்றுட் கூறப்படும் கடைச்சங்கம் அன்று என்பது, இந்நூற்கு உரைகண்ட கச்சினர்க்கினியாது உரைக் குறிப்பால் தெரிகின்றது. அவர் இந்நாலே, பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியன வாம்’ என்று குறிக்கின்ருர். இனி, இக் கிருத்தக்க தேவ ாது காலத்தை ஆராய்ந்து காண முயன்ற ஆராய்ச்சியாளக் இவருடைய காலம் கி. பி. 900-அல்லது அதற்குப் பிந்திய தாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். நூல் வரலாறு தமிழ் நாட்டில் சமண் சமயத்தவருள், இச்சிந்தாமணி யேயன்றிச் சத்திாசூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவங்கா நாடகம், சீவங்கா சம்பு என்பன வடமொழியிலும், மகாபுரா

  • PP. 375 Ancient India. By Dr. S. K. Iyengar.