பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

“சீவகன் காவியத் தலைவன்; அவனைச் சிந்தா மணியே’ என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது.

இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று தோன்றுகிறது.

இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.

அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.

கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டியுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக விளங்கியுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன் கவிதையாற்றலால் அழகுபடுத்தி