பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118சீவக சிந்தாமணிகொண்டிருக்கும். அவன் கண்ணியமானவன் தான்; இதை அவர்களிடம் கூறி விடு என்று சொல்லிச் சென்றான்”

“நாடகமே இந்த உலகம்”

“என்ன செய்வது இப்படியும் நடிக்க வேண்டி இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.


6. கேமசரி இலம்பகம்

பல்லவ தேசத்தை விட்டு நல்லவனாகத் தொடர்ந்து நடந்தான்; அவன் பயணத்தின் அடுத்த தலைப்பு தக்க நாடு; தக்கநாட்டில் ஏமமா புரம் என்ற நகரை அடைந்தான்.

அந்த ஊரில் ஒரு அங்காடி இருந்தது; அங்கே விடலைகள் இளநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அந்தக் காளைப் பருவத்தினர் மிடுக்காகவும் துடுக்காகவும் இருந்தனர்.

அவர்களைப் பார்த்து “இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்று கேட்டான்.

“பெண்கள்” என்றார்கள்; அவர்கள் கண்கள் கிண்டல் பேசின.

“விளையாடுகிறீர்களா?” என்றான்.

“கலியாணமாகாத பெண்கள்; உள்ளூர்க்காரர்கள் நாங்கள்; இங்கே காத்துக்கிடக்கிறோம்; அவர்களுக்கு எங்களைப் பிடிக்க வில்லையாம்; வெளிநாட்டுச் சரக்குத் தான் அவர்களுக்குக் கிக், நீ போனால் சிக்கிக்கொள்வாய்” என்றார்கள்.

இவனை அவர்கள் சற்றுப் பொறாமையோடு பார்த்தனர். இவன் அழகாக இருப்பதால் அவர்கள் இப்படிப் பேசினார்கள்.

“ஏதாவது ஒரு முகவரி சொல்ல முடியுமா?”