பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124சீவக சிந்தாமணி



“அப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் அதிருஷ்டம்; கட்டினவள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டார்கள். எண்பது எட்டிப்பார்க்கிறது; பதினெட்டைத் தேடுகிறான்; வாங்கி வைத்தான்; பொட்டலத்தைப் பிரித்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்குள் அவன் மருத்துவரின் கைப் பாவையானான்; அவர் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார். அவர் கைமீறிப் போய் விட்டது. மெய்தள்ளாடிக் கபம் கட்டிக்கொண்டது; அவர் சபம் சாயவில்லை. அவன் இளமையில் கேட்டிருக்கிறான். தானம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று; வீட்டில் பொன் முடிச்சு ஒன்று பத்திரப்படுத்தி இருந்தான்.”

“கடைசி நாட்கள் என்பதால் கருணை மிகுந்த சுற்றத்தினர் அவனை வந்து சுற்றிக் கொண்டனர். இப்பவோ பின்னையோ எப்பவோ என்று காத்துக் கிடந்தனர். தன் அன்புக்கு இனிய இளைய தாரத்தை அழைத்து “இதோ அதை எடு” என்று கையால் சைகை காட்டி அப்பொன் முடிச்சை எடுத்துவரக் குறிப்புக் காட்டினான்.”

“கயல்விழி படைத்த அந்த முயல் குணம் படைத்தவள் “ஐயா, விளம்பழமா கேட்கிறீர். இந்த நிலையில் உடம்புக்கு ஆகாதே” என்று சொல்லை மாற்றினாள். மற்றவர்களும் நம்பி விட்டார்கள். மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்றார்கள்.”

“இவள் மாதிரி தான் எல்லாரும் இருக்க வேண்டும்; எவ்வளவு பொறுமை! நினைத்தாலே அது பெருமை; அந்தக் கிழவன் கேட்டது எல்லாம் கொடுக்காமல் சிறுபிள்ளையைக் கண்டித்து வளர்ப்பது போல் அவரைக் கட்டுப்படுத்திக் காக்கின்றாளே இவளல்லவா சதி அனுசூயை, நளாயினி இவள் கால் தூசுக்குக் கூடப் பெற