பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148சீவக சிந்தாமணிநலிவு அடைவதற்குத் தாய் வீடு போய்ச் சேரவில்லை. தான் எடுத்த கொள்கை செயல்படும்வரை தவப் பள்ளியில் இருந்து சிந்தித்துப் பொறுமையாகச் செயல்பட்ட தாயின் பேருள்ளத்தை வியந்தான்.

அறுத்து விட்டதாலேயே அனைத்தையும் இழந்து விட்டதாக நினைக்கப் பழக்கப்படுத்தப்பட்ட இந்த நாட்டில் அது ஒரு இழப்பே தவிர அதுவே பிழைப்பு அன்று என்று அறிந்து அவள் நடந்து கொண்டாள். இத் தனி நிலை பாராட்டத்தக்கது என்று மதிப்பிட்டாள். கணவன் மனைவி இவர்கள் வாழ்க்கைத் துணைவர்களே அன்றி அவர்களே வாழ்க்கை அல்ல; இந்த வகையில் விசயை உலகுக்குப் புது வழி காட்டியவளாய்த் திகழ்ந்தாள்.

தேநீர் குடிக்க வெளியே செல்லவில்லை; பொழிலில் அவர்களை இருக்கவைத்து அவன் ஊரைச் சுற்றிவரச் சென்றான்.

புத்திசேனன் சீவகன் அரசமகன் ஆதலின் அவனைத் தனியே அனுப்புவது தக்கது அன்று என்று நினைத்தான்; பதுமுகன் அவன் மெய்க்காவலன் ஆகச் செயல்பட்டான்.

“நீ தனித்துப் போவது சரி இல்லை” என்றான் பதுமுகன்.

“எனக்கு அந்த உரிமை இருக்கிறது” என்றான்.

“நீ அரசமகன் என்று அறிந்த பிறகு அந்த உரிமையை இழக்க வேண்டியதுதான்”

“அப்படி என்றால் இந்த அரசப்பொறுப்பே வேண்டாம்” என்றான்.

“மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்; அதனால் இது விரும்பத்தக்க பதவி அல்ல” என்றான்.