பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமலையார் இலம்பகம்149“மற்றவர்களுக்காவே வாழ வேண்டியிருக்கிறது; தனி மனிதன் சுதந்திரம் பறிபோகிறது” என்றான்.

“பதவி; அதன் தண்டனை இதுதான்” என்றான் பது முகன்.

“நான் இப்பொழுது அரசன் இல்லை; உம்முடைய தோழன். அந்தக் காலத்தில் நான் ஆடமுடியாது; இப்பொழுது சிறிது விளையாடி விட்டு வருகிறேன்” என்றான்.

ஏதோ விளையாட்டு அரங்கத்திற்குச் செல்வதுபோல இவன் காதல் சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. சில நாட்களாக அவன் மனநிலை சரியாக இல்லை. அன்னையைப் பார்த்த பிறகு மிக நல்லவனாக இறுகி விட்டான்.

சிரிக்கும் சந்தர்ப்பங்களும் குறைந்துவிட்டன; கல கலப்பு அவனை விட்டு அகன்று விட்டது.

குடிகாரனுக்கு வேட்கை வெறி வந்து விட்டால் எங்கே சரக்குக்கிடைக்கிறது என்பதை அவன் தேடாமல் இருப்பது இல்லை. இளமை முறுக்கு; கிறுக்குகள் அவனுக்குத் தேவைப்பட்டன.

சோலைகளுக்குச் சென்றால் மயில்கள் வந்து அங்குத் தோகை விரித்தாடும். அவற்றின் அழகைக் கண்டு ரசிக்கச் சோலைநோக்கிச் சென்றான். அதற்குள் சாலையில் ஒரு விஷயத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவன் மனத் திரையில் தக்கநாட்டின் குரவ மரமும் அதைச் சுற்றிய வண்டுகளும் நினைவுக்கு வந்தன.

“அவையும் நம்மைப் போலத்தான்” என்று அவள் உரைத்த சொற்கள் நாத ஒலியாக ஒலித்துக் கொண்டு