பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூமகள் இலம்பகம்181
 


ஆக்கியது ஆற்றங்கரையில் இருந்த ஆலமரமே, அங்கே அவ்வப்பொழுது சென்று பழைய நினைவுகளில் பொழுது போக்குவது உண்டு; அது நூறு வருஷங்களாக அங்கே இருந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டார்கள்; அங்கே மற்றவர்கள் தங்கி நிழல் பெற வேண்டிய வசதிகள் செய்து தந்தான்.

அரசு என்பது ஈட்டலும் ஈட்டியவற்றை வகுத்தலும் என்பது அறிந்து அவன் நாட்டுப் பொருளை அறவழிகளில் செலவிட வழி வகைகள் செய்தான். நாட்டில் தொழில் வளம் பெருக இளைஞர்களுக்கு மூலதனம் வழங்கினான்.

தன் நெருங்கிய தோழர்கள், உறவினர்கள் நண்பர்கள் என்பதற்காக அவன் பதவிகள் வழங்கவில்லை. அதற்காகவே அவர்களையும் ஒதுக்கவில்லை; தக்கவர்களுக்கும், அறிவு மிக்கவர்களுக்கும் செயலாற்றல் படைத்த செம்மல்களுக்கும் உயர் பதவிகள் தந்தான். அவர்களும் அதற்குத் தக்கபடி பொறுப்புடன் நடந்து கொண்டனர்.

தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்குக் காரண மானவர்களை மதித்துச் சிலைகள் எழுப்புவதற்கு பதிலாக அற நிறுவனங்கள் என்ற பெயரால் அறச் செயல்களுக்கு ஆக்கம் தந்தான். சுதஞ்சணன், தன் தாய்க்கு உதவிய காடு உறை தெய்வம், அச்சணந்தி ஆசிரியர், தன் தாய் விசயமா தேவி, கந்துக்கடன், சுநந்தை, சீதத்தன் இவர்கள் பெயரில் மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் கட்டி மக்கள் மன நோய், உடல்நோய் நீக்க அமைத்துத் தந்தான்.

விசயமாதேவி தவப்பள்ளிகளைப் பெருக்கி அவற்றை ஆறுதல் இல்லங்கள் என்று பெயரிட்டுக் காணார், கேளார், கால் முடப்பட்டோர், முதியோர் இவர்கள் தங்கும் இட மாக மாற்றினாள்.

கன்னிமாடங்களில் தனிமையையே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிய இளம் பிஞ்சு