பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
182சீவக சிந்தாமணி
 


களுக்குத் தக்க வாய்ப்பளித்து மணம் செய்வித்தும், பொருள் உதவி செய்தும் நல்ல குடி மக்களாக ஆக்கினான். தவசிகள் என்றும் யோகிகள் என்றும் சொல்லிக் கொண்டு தியானத் தில் மூழ்கியவர்களை இந்த உலகத்தில் அவர்கள் செய்யத் தக்க பணிகள் உள எனக் காட்டித் தொண்டு நிறுவனங் களில் பங்கு கொள்ளச் செய்து அவர்கல் வாழ்க்கையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தினான்.

அவன் இலக்கணையை மணந்தான் என்பதையும், எண்மரோடு வாழ்ந்தான் என்பதையும், ஒவ்வொரு வாழையும் ஒரு குலை ஈன்றது என்பதையும் சொல்வது கதைக்குத் துணை செய்யாது என்பதால் அவற்றை விவரிக்கவில்லை.

மூத்த மகனுக்குச் சச்சந்தன் என்று பெயரிட்டு அவனும் மளமள என்று வளர்ந்து பெரியவன் ஆனான் என்பது கதைக்குத் தேவையான செய்தியாகிறது. ஏனெனில் அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி நந்தட்டனிடம் ஆட்சியை ஒப்புவித்து சீவகன் விடுதலை பெற்றான் என்பதைச் சொல்லியாக வேண்டியுள்ளது.

ஒரு செய்தி விடப்பட்டுவிட்டது. அநங்கமாலை என்ற பழைய சிநேகிதி அவனை வந்து பார்த்தாள்.

தான் அநங்கமாலையின் தோழி என்று தெரிவித்தாள்

அவன் சிரித்தான்.

“பழகியவரை மறக்கும் பண்பற்றவன் அல்லன்நான்” என்று சொல்லி அவளைத் தான் மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தினான்.

அவன் அவளுக்கு ஒரு கலையரங்கு கட்டித் தந்து நாட்டியக் கலை கற்றுத்தரும் ஆசிரியை ஆக்கி உயர்வுபடுத்தினான். அது அனைவரும் அறிந்து பாராட்டும் செய்தியாக அமைந்தது.