பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி இலம்பகம்183



இராசமாபுரத்தில் அவன் தோற்றுவித்த கலைப்பள்ளி இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.


12. முத்தி இலம்பகம்

எதிர்பாராத நிலையில் தவம் செய்யச் சென்ற அச்சணந்தி ஆசிரியர் அங்கு வந்து சேர்ந்தார்.

இவன் அடைந்த வெற்றிகள் கேட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அருச்சுனன் களத்தில் நின்று வில்லைக் கீழே போட்டு விட்டு அயர்ந்த நிலையில் கண்ணனை விழித்துப் பார்த்தான்; அந்த நிலையில்தான் சீவகன் இருந்தான்.

“அறிதோறும் அறியாமை இதில் உள்ள இன்பம் குறைந்துவிட்டது. எல்லாம் பழமையாகி விட்டது” என்றான்.

“முதுமையின் அறிகுறி இது; முதிர்ந்து அறிவு பெறுகிறாய் என்பதற்கு இது அடையாளம்” என்றார்.

“எல்லாம் யோசித்துப்பார்க்கையில் உண்பதும் உறங்குவதாக முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.”

“வாழ்க்கைக்கு நாம் தான் பொருள் காண வேண்டும்; புதிய கடமைகளில் இறங்க வேண்டும்; உன் பார்வையும் மாற வேண்டும்” என்றார்.

“எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை” என்று அவரிடம் கூறினான்.

“காரனம் ?”

“அந்த நிகழ்ச்சியைப் பிறகு கூறுகிறேன்; இந்த ஆட்சியை என்மகன் மூத்தவன் சச்சந்தனுக்குத் தந்து விட்டேன்” என்றான்.