பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184சீவக சிந்தாமணி“அந்த நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிவிட்டது; எண்ணிப்பார்க்கிறேன்.”

“இங்குத் துறவிகள் வருகிறார்கள்; வாழ்க்கையின் தத்துவங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். திருத்தக்கதேவர் எழுதிய நூல் ஒன்றனையும் படித்தேன், அவர் இளமை, செல்வம், யாக்கை நிலையாமையை அதில் வற்புறுத்துகிறார்; அழகிய மனைவியரை அக்காவிய நாயகன் பிரிந்து விடுகிறான்; அவர்கள் அதற்கு வருந்தி அழும் அழுகை, நெஞ்சைப் பிளக்கிறது; அவனை நம்பித்தானே அவர்கள் அவனை மணந்து கொண்டார்கள். அவர்களைக் கைவிட்டுத் துறவு கொள்வது நியாயமா! எனக்கு ஏதோ கொடுமை இழைப்பதுபோல் தோன்றுகிறது. அந்த நூலைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை” என்றான்.

“அவர் வாசகங்கள் உன்னால் அறிய முடியாமல் இருக்கலாம்; நோக்கத்தை நீ அறிவது நலம்.”

“அறம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிலையாமைகளை நம் பெரியோர்கள் வற்புறுத்துகிறார்கள்.”

“நிலையாமையை உணர்வதால் நாம் இருக்கும் வாழ் நாளைத் தக்கபடி பயன்படுத்துவோம். அதற்காகத்தான் இவ்வறங்களைக் கூறுகிறார்கள்.”

“இந்தத் தத்துவங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் அவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.”

“வாழ்க்கை நிலைத்த ஒன்று. பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போனது என்பது வறட்டு வேதாந்தம்.”

“வாழ்க்கை ஒரு நீரோட்டம் போன்றது. அதனை யாரும் தடை செய்ய முடியாது.”

“குழந்தை வாலிபன் ஆகிறான்; வாலிபன் முதியவன் ஆகிறான். இவை பருவ மாறுதல்கள்; இவை ரசாயன மாறு