பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20சீவக சிந்தாமணிவரைபடம் காட்டி அறிவுறுத்தினார். அவர் இராசமா புரத்தில் நீண்ட காலம் தங்கியவர்; அதனால் அவர் அங்கு நடந்தவை எல்லாம் கேட்டு அறிந்தவராக இருந்தார். கந்துக்கடன் இல்லத்துக்கு வந்தபோது சீவகனின் தாய் சுநந்தை அவரை இன்முகம் காட்டி நல்வரவு தந்து அவர் பசிக்கு உணவு அளித்துக் களைப்பைப் போக்கினாள்; பச்சிளம் குழந்தையாக இருந்த இந்தப் பவித்திரனைக் கண்டதும் அவர் இதுவரைதான் உழந்து வந்த யானைத் தீ என்னும் நோய் நீங்கப் பெற்றுப் பொலிவோடு விளங்கினார். அன்பும் பண்பும் மிக்க அந்தக் குடும்பத்தில் அடி எடுத்து வைத்தபோதே அவர் நோய் நொடி நீங்கி நலம்மிக்க யாக்கை பெற்றார். அது அவருக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.

காலைக் கதிரவனைப் போல ஒளி வீசிய அந்த வாலைக் குமரனுக்குத் தான் அறிந்த படைக்கலப் பயிற்சியைக் கற்றுத்தருவதில் பெருமை கண்டார். நாள் செல்லச் செல்லச் அவன் நாட்டு இளவரசன் என்பதையும். அறிந்து கொண்டார். எனவே அவனுக்குக் கல்வி கற்பிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டார்.

இதுவரை சீவகன் அறியாத சில உண்மைகளைக் கதை சொல்வது போல அவனுக்கு எடுத்து உரைத்தார்,

“நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்க வேண்டும். இந்த நாட்டின் ஆட்சி சீர்குலைந்து இருக்கிறது, காரணம் தெரியுமா? மன்னவன் மக்களுக்கு உயிர் போன்றவன்; அவன் வறியவன் காக்கும் வயல் போல மக்களைக் காக்க வேண்டும். நாடு என்பது நிலத்தால் சிறப்புப் பெறுவது இல்லை; அது மேடு ஆயினும் சரி, காடு ஆயினும் சரி; விளையும் நிலமாயினும் சரி; விளையாத கரம்பு நிலமாயினும் சரி; அதனால்மட்டும் மக்கள் வளமுடன் வாழ்வது இல்லை; அதை ஆளும் அரசன் நாட்டைச்