பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தையார் இலம்பகம்23ஊருக்கு அரசனாக இருந்தவர்; தவம் செய்ய வேண்டி நாட்டைத் தம் மகனிடம் ஒப்புவித்துத் தென்புலம் நோக்கி வந்தார். வரும்போது யானைத் தீ என்னும் நோய் அவரை வாட்ட அது தீரப் பல தலங்களும் சுற்றி வந்தார். இராசமாபுரம் வந்த பிறகு சுநந்தையின் கைச்சோறு உண்ட பின் தன் மெய்ச்சோர்வு நீங்கி நோயற்ற வாழ்வை அடைந்தார். அதற்குக் கைம்மாறாகவே சீவகனுக்குப் படைக்கலப் பயிற்சி அளித்தார். இவ்வரலாற்றைச் சொல்லிச் சீவகனிடம் விடைபெற்றார்.


2. கோவிந்தையார் இலம்பகம்

ஆசிரியர் அச்சணந்தி அகன்றபின அவர் காட்டிய வழியே மேலும் கல்வியும் கலைகளும் கற்று எல்லாத் துறைகளிலும் வல்லவனாக விளங்கினான்; வீணை வித்தகனாகத் திகழ்ந்தான். ஞானம், அழகு, வீரம் மூன்றும் அவனிடம் முழு அளவு நிலவின.

சுநந்தைக்கு மற்றொரு மகன் நந்தட்டன் என்பான் பிறந்து இவனுக்கு உற்ற துணைவனாகச் செயல்பட்டான். இராமனுக்கு வாய்த்த இலக்குவனாக அவன் நிழற்போல அவன்பின் தொடர்ந்தான்; கந்துக்கடனுக்கு வாழ்க்கைத் துணைக்கு சுநந்தையும், சுகத்துக்குச் சில கணிகையரும் வாய்த்தனர்.

வெள்ளைக் கணக்கில் கட்டிய மனைவி என்றால் கருப்புக் கணக்கில் விருப்பமுள்ள மாதர்களாக இவர்களை வைத்துக் குடும்பம் நடத்தினான்; விளைவு நபுலன் விபுலன் என்ற நன்மக்கள் இருவர் அவன் பெயரைச் சொல்லினர்.

இராம காதையில் இராமனுக்கு வாய்த்தது போல் தம்பியர் மூவர் வாய்த்தனர். பதுமுகன் என்பவனும் புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல்